பாடல்கள்
கொண்டவை. ஆயினும் அவர்க்குப் புகழ் தேடித் தந்தவை ‘காந்தி அஞ்சலி’
என்பதில் உள்ள பாடல்களே. காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது.
கத்தி இன்றி ரத்தம் இன்றி
யுத்தம் ஒன்று வருகுது
சத்தியத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!
காந்தி என்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்த ருக்குள் தீமை குன்ற
வாய்ந்த தெய்வ மார்க்கமே
என்ற
பாடலைப் பாடித் தந்து தமிழ்மக்களின் உள்ளத்தில் இடம் பெற்றார். காந்தியடிகளைப்பற்றி
அசலாம்பிகை அம்மையார் மூவாயிரம் பாடல்கள் கொண்ட காந்தி புராணம் என்ற வரலாற்றுக்
காப்பியம் பாடியிருக்கிறார். ராய. சொக்கலிங்கம் ‘காந்தி பிள்ளைத் தமிழ்’
என்ற அழகான செய்யள்நூல் பாடியுள்ளார். வேறு சில பாக்களும் பாடியுள்ளார். அவ்வாறே
கவிஞர் பிறரும் தனித்தனிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். காந்தீயக் கவிஞராகப் பல
பாடல்கள் இயற்றிப் பெயர் பெற்றவர் இராமலிங்கம் பிள்ளையே. அவருடைய பாடல்களில்
உணர்ச்சியின் ஆழமும் வேகமும் காண்பதற்கில்லை; பண்பாட்டின் அமைதியைக் காணலாம்;
அது காந்தீயத்துக்கு ஒத்துவருவதாக உள்ளது.
சுத்தானந்த
பாரதியார் முதலானோர்
சுதந்தரப் போராட்டக் காலத்திலிருந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கவிதைகளும் இசைப்பாடல்களும்
ஓயாமல் எழுதிவரும் துறவியார் சுத்தானந்த பாரதியார். அவருடைய பாடல்கள் பலவகையானவை;
நாட்டுணர்ச்சி ஊட்டும் பாடல்கள் உண்டு; சமய ஆர்வம் வளர்க்கும் கவிதைகள் உண்டு;
புத்துலகக் கனவுபற்றிய பாடல்களும் உண்டு. அவருடைய செய்யுள்நூல்கள் பலவற்றிலும், மரபுவழிப்பட்ட
பாடல்களையும் காணலாம்; புதிய கவிதைவடிவுகளையும் காணலாம். ‘பாரத சக்தி காவியம்’
அவருடைய பெரிய செய்யுள் நூல். இசைக்கலைஞர்கள் போற்றிப் பாடும் இசைப்பாடல்கள்
பலவற்றை அவர் இயற்றியிருக்கிறார்; செய்யுள் நாடகங்களையும் படைத்திருக்கிறார்.
காந்தியடிகளின் நெறியில் நம்பிக்கைகொண்டு 1918 முதல் தொடர்ந்து பல கவிதைநூல்கள்
எழுதித் தொண்டு செய்பவர் முருகேச பாகவதர். மரபுவழிப் பாடல்களும் புதிய புதிய மெட்டுகளில்
அமைந்த கவிதைகளும்
|