அணிந்துரை ix
தமிழர்கள் தங்கள் விழுமிய வாழ்வு நலன்களைத் தேடி முன்னேறுவதற்கு மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தம் தெள்ளிய அறிவாலும், ஆய்வுத் திறனாலும் எழுதிய நூல்கள் அனைத்தும் பயன் தருவன.
பாவாணர் நூல்கள் அனைத்தும் தமிழர் இல்லந்தோறும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது நூலகங்களிலும் பாவாணர் நூல்கள் இடம்பெற்று, அதன்மூலம் மக்களின் அறிவு-உணர்வோட்டத்தில் பாவாணரின் கருத்துகள் முழுமையாகக் கலக்கும்போதுதான் தமிழர் வாழ்வு உயிர்ப்புப் பெறும் என்பது என் நம்பிக்கை. தமிழுலகம் இம் முயற்சிகளுக்கு ஊக்கம் தரவேண்டும் என வேண்டுகிறேன்.

அன்பன்,
கா.காளிமுத்து