பதிப்பாசிரியர் உரை xli
3.முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே தேர்தலின் போது பொதுமேடை அமைத்து அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் பேசவைத்தது.
4. 'Honourable' என்னும் ஆங்கிலச் சொல்லுக்குக் ‘கனம்‘ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வந்தனர். 1962ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் இந்த ஊரில் உயர்நிலைப் பள்ளியைத் திறந்து வைத்தார். கனம் என்பதனை நீக்கிவிட்டு ‘மாண்புமிகு முதலமைச்சர் கு.காமராசர்‘ என்று திறப்புவிழாக் கல்வெட்டில் பொறித்தோம். அச்சொல்தான் இப்போது தமிழ்நாட்டில் அரசாலும் மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
5. தொண்டர்படை ஒன்று சீருடையுடன் அமைக்கப்பட்டது. இரவில் திருட்டுப் போகாது காவல் செய்வதும் திருமணங்களில் விருந்து பரிமாறுவதும் விழாக்காலங்களில் மக்களை ஒழுங்கபடுத்துவதும் இதன் பணிகளாகும்.
தந்தை பெரியார், சர்தார் அ.வேதரத்தினம்பிள்ளை, தவத்திரு குன்றக் குடி அடிகளார், பெருந்தலைவர் கு.காமராசர், ஆர்.வேங்கடராமன், மக்கள் கலெக்டர் ஆர்.எஸ்.மலையப்பன், வே.கார்த்திகேயன், இ.ஆ.ப., வேத நாராயணன், இ.ஆ.ப. போன்றோர் எங்கள் பணிகளைப் பாராட்டியுள்ளனர்.
7-7-74 அன்று பாவாணர் புலவர் மாணிக்கம் வெற்றிச் செல்வி திருமணத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி வைத்து வழங்கினார்.
காளிகோயில் திருப்பணி முடிக்கப்பட்டுத் தமிழ் நெறிப்படி தவத்திரு குன்றக்குடி அடிகளாரைக் கொண்டு திருமுழுக்குச் செய்யப்பட்டது. பேருர் சாந்தலிங்க மடத்து இராமசாமி அடிகளார், சுந்தரேச அடிகளார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதியோர் கல்வி, திருக்குறள் வகுப்பு நடாத்தி மக்கட்கு அறிவு புகட்டப்பட்டது.
உரத்தநாட்டுப் பகுதியில் தனித்தமிழ் பரவ அடித்தளம் அமைத்தது. பாவாணர் படிப்பகம் தோற்றுவிக்கப்பட்டது.
பதிப்புப் பணி
பொருள்வளம் படைத்த பலர் இருக்கத் தமிழ் ஆர்வம் ஒன்றனையே முதலாகக் கொண்டு பாவாணர் படைத்த நூல்கள் அனைத்தும் மறுபதிப்பாக வெளிவருகின்றன. இந்த வெளியீட்டின் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனும், பதிப்பாளர் தமிழ்மொழி காவலர் கோ. இளவழகனும் இந்தச் சிற்றூரில் பிறந்தவர்கள். இதனால் சிற்றூர் சீரூராய்த் திகழும் வாய்ப்புக் கிடைத்தமை எங்களுக்குக் கிடைத்தற்கரிய பேறாகும். பழைய பதிப்பில் உள்ள குறைகள் களையப் பெற்றுச் செவ்வையாக இப் பதிப்பு வெளிவருகின்றது. இதுவரை வெளிவந்த தமிழ்நூல்களில் உள்ள பிழைகள் கணக்கில. பல நூல்களும்