xxxvi |
தமிழ்நாட்டு விளையாட்டுகள் |
மேனாட்டுக்
கிறித்தவக் குரவரின் வளமனைக் காவற்காரனாகப் பணியாற்றினார். இவர் மகன் ஞானமுத்து.
அவருக்குப் பிறந்தவரே நம் நூலாசிரியர் ஞா.தேவநேயர். |
தனித்தமிழுக்குப் பரிதிமாற் கலைஞர் வித்தூன்றினார்; மறைமலையடிகளார்
நீருற்றி வளர்த்தார்; பாவாணரே களையெடுத்து எருவிட்டுக் காத்து வளர்த்தார். |
மாந்தன் பிறப்பிடம் குமரிக்கண்டம் என்பதிலும், ஞால முதன்மொழி தமிழ்
என்பதிலும் அசைக்கமுடியாத முடிவு கொண்டிருந்தார். இவற்றை நிலைநாட்டும் பொருட்டு
முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். சேலம் நகராண்மைக் கல்லூரியின்
முதல்வராய் இராமசாமிக் கவுண்டர் பணியாற்றினார்.அப்போது அங்குப் பாவாணர் விரிவுரையாளராய்ப் பணியாற்றினார். பெருஞ்சித்திரனார்
போன்ற பல மாணாக்கரைத் தனித்தமிழ் உணர்ச்சியுள்ளவராய் ஆக்கினார். |
பாரதிதாசன் பரம்பரை என்று பாவலர் கூட்டம் ஒன்று எழுந்ததைப் போல, பாவாணர்
பரம்பரை ஒன்று தனித்தமிழ் எழுச்சியுடன் நாடெங்கும் எழுந்தது. அயல்நாடுகள் பலவற்றுள்ளும்
‘பாவாணர் மன்றம்‘ அமைத்துத் தனித்தமிழ் வளர்க்கப்படுகிறது. தமிழுக்குக் கேடு
செய்வார் யாராக இருந்தாலும் அவர்களை வெறுத்துக் ‘கோடன்மார்‘ என்றும் ‘கொண்டான்மார்‘
என்றும் கூறிப் பாவாணர் தூற்றினார். |
உலகத் தமிழ்க் கழகம் |
தனித்தமிழ் வளர்ப்பதற்கென்றே 1968-ல் உலகத் தமிழ்க் கழகம் ஒன்று தொடங்கப்
பெற்றது. கழகத்தின் கிளைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டன. 1969-ல்
புறம்புக்குடியில் உ.த.க. முதல் மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் முனைவர் சி.இலக்குவனார்,
முனைவர் வ.சுப.மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பலர்
பங்கேற்றுச் சிறப்பித்தனர். திருக்குறள் தமிழ் மரபுரை இம் மாநாட்டில் வெளியிடப்பட்டது. |
நான்காம் உலகத் தமிழ்க் கழக மாநாடு சென்னையில் பெரியார்
திடலில் பதிப்பாசிரியர் அ. நக்கீரன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்ச்சொற்கள் ஞாலமுழுதும் பரவிக் கிடக்கின்றன; பன்னாட்டு
மொழிகளிலும் விரவிக் கிடக்கின்றன என்பதனைப் பாவாணர்தாம் தம் நுண்மாண்
நுழைபுலத்தால் கண்டுபிடித்து நிறுவினார். கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழி
களின் ஒப்பிலக்கணம்‘ இதற்குத் துணை செய்தது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்
பணியாற்றியபோது வங்கமொழி அறிஞர் சுனித்குமார் சட்டர்சியால் ஏற்பட்ட சிக்கலால்
அண்ணாலை பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறினார். |
தமிழக அரசு இவரைச் சரியான முறையில் பயன்படுத்திக்
கொள்ளவில்லை. 1968-ல் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் இவர் புறக்கணிக்கப்பட்டார்.
புதையலைத் தேடிக் கண்டுபிடிப்பது போலவும், எண்ணெய் |