தமிழனின் வீழ்ச்சிக்கு அரசியல்காரர்களும், குமுகாயச் சீர்திருத்தக்காரர்களும்
எத்தனையோ காரணங்களைத் தம்தம் வரலாற்று அறிவிற் கேற்பக் கூறினாலும், உண்மையான
காரணங்கள் இரண்டு. ஒன்று தமிழனின் குமுகாயச் சரிவு; இரண்டு தமிழனின் மொழிச்சரிவு.
இவ்விரண்டு சரிவுகளும் ஆரியர்கள் என்று இத் தமிழக மண்ணில் காலடி வைத்தனரோ அன்றே
தொடங்கின. இச் சரிவுக்குத் தடுப்புச்சுவர் கட்டக் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே
தமிழன் முயன்றான். ஆனால், ஆரியத்தால் ஏற்பட்ட சரிவை ஆரியத்தைக்கொண்டே சரிசெய்ய
முயன்றதால் தோல்வியே கண்டான். இந்த இரண்டு சரிவுகளுக்கும் இந் நாட்டில் உள்ள
சமயங்களே மண்வெட்டிகளாகப் பயன்பட்டன. முதற்சரிவைக் கண்டுகாட்டியவர் பெரியார்
ஈ.வே.ரா. இரண்டாம் சரிவைக் கண்டுகாட்டியவர் மறைமறையடிகளார். |