‘தமிழில் வடமொழிக் கலப்பு என்பது பாலில் தண்ணீர் கலந்ததற்கு ஒப்பாகும்;
பாலிலிருந்து தண்ணீரைப் பிரிப்பதுதான் கடுமையாகும்; எனினும் அதையே எளிதாகச் செய்துவிட்டோம்.
தமிழில் ஆங்கிலக் கலப்பு என்பது தண்ணீரில் எண்ணெய்
கலந்ததற்கு ஒப்பாகும்; இதனை எளிதில் பிரித்துவிட முடியும்.
கொஞ்சம் பொறுப்புணர்ச்சி இருந்தால் போதும்; பிறமொழிக்
கலப்புப் பின்னங்கால் பிடரியில்பட ஓடிவிடும்; இதற்கு மிகவும் தேவை, தாழ்வு மனப்பான்மையை
அறவே நீக்கிக்கொள்வதுதான். ஆங்கிலத்தில் சில சொற்களையாவது பேசினால்தான்
மதிப்பு என்றும், அப்போதுதான் படித்தவர் வரிசையில் சேரமுடியும் என்றும் ‘தமிழர்கள்‘
எப்போது கருதத் தொடங்கினார்களோ அப்போதே நேர்ந்தது கேடு.
நம் மொழி உயர்ந்தது; நாம் யார்க்கும் அடிமையாக இல்லை; அடிமையாக
இருக்க வேண்டிய தேவையும் இல்லை என்று துணிந்து எழுந்தால் பாவாணர் கொள்கை நிறைவேறும். |