குல் - சுல் - துல் - நுல் - புல் - முல் என்பன பக்கவேர். அவற்றினின்று
கிளைப்பன சல்லிவேர்.
சொன்மூலம் வேர் (root), அடி (stem), முதனிலை (theme)
என மூவகைப்படும். வேரும் முதல்வேர் (ஆணிவேர்), வழிவேர் (பக்கவேர்),
சார்புவேர் (சல்லிவேர்) என முத்திறப்படும். முதல் வேருக்கு மூலம் முளையாகும்.
முளைக்கு மூலம் வித்தே. அடி என்பது சுவையுங் கொப்புங் கிளையும் போத்துங் குச்சுமாகப்
பிரியும். இவையெல்லாம் தமிழ் போன்ற இயன்மொழியிலேயே தெளிவாகக் காணப்பெறும்"( வட. வர. பகுதி 2, ப.117). |