இராசராசர் :
சோழநாட்டுப் பேரரசர் மூன்றாங் குலோத்துங்கர் இறந்தபின்
கி.பி. 1218இல் அரியணையில் அமர்ந்தவர். இவரை வரலாறு மூன்றாம்
இராசகேசரி இராசராசர் என வழங்கும்.
இராசேந்திரன் :
சோழநாட்டு இளவரசன்; இராசராசரின் புதல்வன். இவனே
மூன்றாம் இராசேந்திரன் என வழங்கப்படுபவன்.
பிருமாதிராசன் :
சோழ நாட்டு அமைச்சர்.
சுந்தரபாண்டியர் : முதல் சடையவர்மன் குலசேகரபாண்டியனின் தம்பி.
குலசேகரன் இறந்த பின் கி.பி. 1216இல் முடிசூட்டிக் கொண்டவன். இவனை
வரலாறு முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்று வழங்கும்.
குருகுலத்தரையன் : சுந்தர பாண்டியனின் அமைச்சன்.
மழவர் மாணிக்கம் : பாண்டியனின் தேர்ப்படைத் தலைவன். இவன்
முழுப்பெயர் திருக்கானப் பேருமையான் மழவச் சக்கரவர்த்தி என்பது.
காங்கேன் :
பாண்டியனின் நாற்படைக்கும் தலைவன் கண்டம் உதயஞ்
செய்தான் காங்கேயன் என்பது இவன் முழுப்பெயர்.
காரணை விழுப்பரையர் : சுந்தர பாண்டியனின் அவைகளைப் புலவர்.
தாமரைக் கண்ணன் :
உறையூர்வாழ் புலவன்; கடியலூர்
உருத்திரங்கண்ணனாரின் வழி வந்தவன். |