முகப்பு | தொடக்கம் |
xiv |
"தொன்மொழியாம் தென்மொழியிற் சதுரகராதி முதலிய பற்பல வகராதிகள் இருப்பினும் அவைகளெல்லாம் பெருவாரியாய்ப் பள்ளிப் பிள்ளைகட்கும் பிறர்க்கும் எளிதிற் பயன்தருவன அல்ல . அன்றியும் அவைகளின் விலை ஏற்றமும் உருவத் தோற்றமும் எல்லாரும் எளிதிற் பெற்று உபயோகிக்க அனுகூலமானவைகளல்ல. ஆகையால், வீணாக விரித்தும் மிகச் சுருக்கியும் பயன்றறதாக்காமல் இதனைத் தற்காலத் தமிழ் மாணவரும் பிறரும் நயமாக வாங்கி நவீன முறையால் உபயோகித்து நலம் அடையுமாறு நல்லெழுத்திலும் நற்காகிதத்திலும் அச்சிட்டிருக்கின்றோம் . "இன்னும் இம் மொழியில் வந்து வழங்கும் வடசொற்களில் இன்றியமையாதவைகளையும், திசைச்சொற்களில் அரசாங்க முறையிலும், அதிகார முறையிலும், வர்த்தக முறையிலும் , சாஸ்திர சாம்பிரதாய இலௌகீக முறைகளிலும் உள்ள எத்தனையோ சொற்களையும் இதில் புதுவனவாகச் சேர்த்திருக்கின்றோம். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே' என்ற ஆன்றோர் மொழிப்படி அவைகள் தகையாம் அன்றி மிகையாகா . " ' அரச னெவ்வழி அவ்வழி குடிகள் ' என்று பழமொழியைப் புதுமொழியாக்க , ' அரசன் எவ்வழி ஆசாரம் அவ்வழி ' என்று ஆக்கிவிடலாம் என்றெண்ணும்படி அநேக நவீன இலௌகீக ஆசாரங்கள் பிரவர்த்தித்திருக்கும் இந் நாளில் முன்னாளைய வழக்கத்தை அனுசரித்த தமிழகராதியைப்போன்ற தொன்றே போதாமையை அனுபவத்தில் உணர்ந்த யாம் , இதில் அநுபந்தங்களாகப் பஞ்சாங்கப் பெயர்களில் பக்ஷங்களின் பெயரையும் , பஞ்சபக்ஷி பெயர்களையும் , அவைகளின் தொழில்களையும், வாரசூலையின் வாரநாழிகைகள் , பரிகாரங்கள் முதலியவைகளையும் , கிரகணங்கள் , பரதகண்டவாசிகளின் பண்டிகைகள் , முகம்மதியர் பண்டிகைகள், உருஸுகள், கிறித்தவர்களின் முக்கியப் பண்டிகைகள் , திருநாட்கள் , அச்சுப்பிழை திருத்தி அச்சுக்கூடத்துக் கனுப்புவதற்கு வேண்டிய திருத்தக்குறிகள் , அவைகளின் விளக்கங்கள் இங்கிலீஷ் நாணய வழக்கப்பெயர்கள் , பரதகண்ட நாணய வழக்கப் பெயர்கள் , புகை வண்டியில் ஏற்றும் சாமான்களின் நிறை அளவின் பெயர்கள் , சென்னை முகத்தலளவை, பரதகண்ட கால அளவைகளின் பெயர்கள், இங்கிலீஷ் கால அளவைகளின் பெயர்கள், லீப் வருஷக் குறிப்பு, இங்கிலீஷ் நீட்டலளவைப் பெயர்கள், நிறுத்தலளவைப் பெயர்கள், இங்கிலீஷ் முகத்தலளவைப் பெயர்கள் , தானிய தவச அளவுப் பெயர்கள் , எணவாய் பாட்டுப் பெயர்கள் , இங்கிலீஷ் நிறுத்தலளவைகள் (பொன், வெள்ளி முதலியன), இங்கிலீஷ் மருந்து நிறுத்தலளவைப் பெயர்கள் , இங்கிலீஷ் நீட்டலளவைப் பெயர்கள், இங்கிலீஷ் சதுர அளவைப் பெயர்கள், வாக்கியங்கள் அர்த்தமாவதற் கனுகூலமான அடையாளப் பெயர்கள் முதலியவைகளையும் முறையாகச் சேர்த்திருக்கின்றோம் . " அன்றியும் அனுபந்தம் ஒன்றில் அசல் , அலாதி என்பவைகளைப்போன்ற உருது பாஷைப் பதங்கள் , அலமாரி , கிராம்பு போன்ற போர்த்துகேசியச் சொற்கள் , எச்சரிக்கை, வாடிக்கைபோன்ற தெலுங்கு பதங்கள் , பயங்காளி, விரயம் போன்ற கிராமியச் சொற்கள், எராளம் , தாராளம் முதலிய வழக்குச் சொற்கள் , கவர்ன்மெண்ட் , கவர்னர் முதலிய இங்கிலீஷ் பதங்கள் முதலியவைகளையும் - "அனுபந்தம் இரண்டில் அக்ரிமெண்ட் , அங்குஸ்தான் முதலிய அன்னிய வியாபாரக் கூட்டு சம்பந்தமான மொழிகளையும் , பிறமத சம்பந்தமான மொழிகளையும் , நவீன சாஸ்திர சம்பந்தமான மொழிகளையும் இன்னும் பற்பல புதுச் சொற்களையும் - "அனுபந்தம் மூன்றில் வருஷங்கள் , மாதங்கள் , வாரங்கள் , இராகுகால நாழிகைகள் , கிரகங்களின் பெயர்கள் , நக்ஷத்திரங்களின் பெயர்கள் , இலக்கினங்களின் பெயர்கள் , திதிகளின் பெயர்கள், யோகங்கள், கரணங்கள் , மூன்றாம் பிறை, இராசிகளின் பெயர்கள் ஆகியவைகளைக் குறிக்கும் சொற்களையும் நவீன முறையாக யாவரும் நலம்பெறப் புகுத்தி வெளியிட்டிருக்கின்றோம் ." (பக்கம் xxxvi - xxxviii) |
![]() |
![]() |
![]() |