முகப்பு | தொடக்கம் |
xxx |
எழுத்து வருக்க அடிப்படையில் சொல்தொகை பின்வருமாறு ;
சொல் - பொருள் அமைப்பு முறை: சொற்களின் அகரநிரலில் இரண்டாம் எழுத்தில் உயிர்மெய்க்கு முன் மெய்வரும் முறையே தழுவப்பட்டிருக்கிறது. தலைச்சொற்கள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து இணைப்புக் குறி (-) இட்டுப் பொருள்விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது. பொருள் வரையறுக்கும்போது கூடியவரையில் சொற்களுக்குரிய நேர்பொருள், தொடர்புபொருள், கருத்துப்பொருள் என்னும் வகையில் அடைவு செய்யப்பட்டுள்ளன. பொருள்விளக்கம் சுருக்கமாயும் விளக்கமாயும் அமையவும் சொல்லின் உண்மை யுருவைப் புலப்படுத்தவும் வளைவுக் குறிகளுக்குள் அவை கொடுக்கப்பட்டுள்ளன . எடுத்துக் காட்டாக, 'அ' என்பது அஃறிணைப் பன்மை விகுதியாகவும், வியங்கோள் விகுதியாகவும், எச்ச விகுதியாகவும் வரும் இயல்பினது. இதனை விளக்க, விகுதி (அஃறிணைப் பன்மை, வியங்கோள், எச்சம் ) எனக் காட்டப்பட்டிருத்தல் காணலாம். கூட்டுச்சொல் தொடரின் பொருள்நிலை விளங்கத் தலைச்சொல்லை அடுத்து, அத் தொடரினைப் பிரித்துக் காட்டுதலும் உண்டு. எடுத்துக்காட்டு; அஃதான்று(அஃது-அன்று), அஃறிணை (அல் - திணை) போல்வன காண்க: |
![]() |
![]() |
![]() |