முகப்புதொடக்கம்

xxxii


பொருள்விளக்கப் பகுதியில் தரப்பெறும் குறியீடுகளும் அவ் விளக்கங்களுக்கு ஏற்பக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சொல்லுக்குரிய வெவ்வேறு பொருள்கள் அரைப்புள்ளியிட்டுக் காட்டப்பட்டுள்ளன. ஒரு பொருளை விளக்க மேலும் அதே பொருளுடைய வேறு எளிய சொல் தரும்பொழுது காற்புள்ளி தரப்பெற்றிருக்கும்.

(எ-டு)
அக்கச்சி - அக்காள், தமக்கை.
அக்கரன் - அறிவில்லாதவன்; எங்கும் நிறைபொருள், கடவுள்.

ஒரு பொருளின் விரிவு அல்லது விளக்கம் காட்ட முக்காற்புள்ளி தரப்பட்டிருக்கும்.

(எ-டு)

இமையவல்லி - காண்க; இமையவதி.
உகாய் - காண்க; உகா.

ஒவ்வொரு தலைச்சொல்லின் பொருளும் முற்றுப்பெறும் இடத்தில் முற்றுப்புள்ளி பெறும்.

அகரமுதலியில் ஒவ்வொரு பக்கமும் இரண்டு பத்தியாக அமைக்கப்பட்டு அகரநிரலில் தலைச்சொற்களும் அவற்றின் பொருள்களும் காட்டப்பட்டுள்ளன. அவ்வப் பக்கத்தில் வரும் முதற் பத்தியின் தொடக்கத் தலைச்சொல்லும் இரண்டாம் பத்தியின் இறுதித் தலைச் சொல்லும் அவ்வப் பத்தியின் மேல் உள்ள கோட்டின் மேலாகத் தலைப்புப்போலத் தரப்பட்டிருக்கும். இவற்றால் குறித்ததொரு பக்கத்தில் எது முதல் எது வரையில் உள்ள சொற்கள் அடங்கியுள்ளன என்பது பயன்படுத்துவாருக்கு எளிதில் தென்பட வாய்ப்பாக உள்ளது. பக்க எண், முதல்-இறுதிச் சொற்குறிப்புகளின் மையமாகத் தரப்பட்டிருக்கிறது.

சென்னைத் தமிழ்ப் பேரகராதியில் பிழைபடத் தந்த பொருள்களுள் சில திருத்தமுற இதில் அமைக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, பிண்டம் என்பதற்கு எட்டாவது பொருளாக,' சூத்திரம், இயல், ஓத்து என்ற மூன்றுறுப்புக்கொண்ட நூல்' என்பது காணப்படுகிறது. இங்கே இயல், ஓத்து என்னும் இரண்டும் ஒரு பொருளனவே. ' சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்புக்கொண்ட நூல்' என்று இவ் வகரமுதலி முந்தையோர் இலக்கண மரபையொட்டித் தந்துள்ளது.

மேலும், பேரகராதியில் இடம்பெறாத பல புதுச் சொற்களும் இவ் வகரமுதலியில் சேர்க்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக ஊதாம்பை, ஏருந்து, கதிகால், நேர்காணல், பரிந்துரை, பேருந்து, போருந்து, மார்க்சியம், விளத்தம் போல்வன குறிப்பிடத்தக்கன.

அகரமுதலியின் பயன்:

நான் ஒரு நூலைப் படித்துவரும்பொழுது விளங்காப் பொருட்பகுதிகள் தென்பட்டால் தக்கவர்களை அடுத்து விளக்கம் பெற்றுக்கொள்ளுகிறோம். அங்ஙனமே தொடர்ப்பொருள் சொற்பொருள்களையும் நாம் கற்றுவல்லார் வழியாகப் பொருள் விளக்கம் பெறுகிறோம். இப்படித் தெரியாத சொற்பொருள்களுக்காக எப்பொழுதும் அறிந்த ஒருவரை நாடிச்செல்ல வேண்டுவதில்லை. எண்ணிய உடனேயே பொருள் சொல்லக்கூடிய கருவிநூல்கள் பலவாகத் தமிழில் உள்ளன. அவைதாம் நிகண்டுகளும் அகராதிகளும் ஆகும். இவைபற்றிய வரலாறுகளை முற்பகுதியில் பார்த்தோம்.

தெரியாத சொற்பொருளை மேலே காட்டிய நூல்களால் எளிதில் தெரிந்து கொள்ளலாம். நிகண்டுகள், கற்றுவல்ல புலவர்களாலேயே பயன்படுத்தத்தக்க அமைப் புடையன. ஆனால், அகரமுதலிகளோ எல்லோராலும் எளிதில் பார்த்துப் பயன்பெறத்தக்க அமைப்புடையன. சொற்கள் எல்லாம் அகரநிரலில் அமைத்துப் பொருள் தரப்பட்டிருப்பதால் அகரமுதலிகளில் நாம் கருதிய சொற்பொருள்களை எளிதில் கண்டுகொள்ளலாம்.

அகராதி பார்ப்பதற்குத் தமிழ் எழுத்துவரிசை முறையைத் தெரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகும். ஆங்கில மொழியில் உள்ள 26 எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருதலை யாவரும் அறிவர்.

நம் தமிழ்மொழியில் அப்படியன்று. உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் உட்பட 247 எழுத்துகள் தமிழில் உள்ளன. இந்த எழுத்துகளனைத்தும் சொல்லுக்கு முதலாக வருதல்