முகப்புதொடக்கம்

xxxiii


இல்லை. நூற்றைந்து எழுத்துகளே சொல்லுக்கு முதலாக வரும் ஆற்றல் பெற்றன. எனவே, நூற்றைந்து எழுத்துகளைக் கொண்ட சொற்களே தமிழ் அகரமுதலிகளில் காணப்பெறும். மொழிமுதலில் வரும் 105 எழுத்துகளைப் பின்வரும் அட்டவணையால் எளிதில் கண்டு கொள்ளலாம்.

மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் : 105
உயிர் எழுத்து: 12
ஒள 12
உயிர்மெய்
எழுத்து: 93
1 கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ 12
2 1
3 சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ 12
4 ஞா ஞி ஞெ ஞே ஞொ 6
5 0
6 0
7 தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ 12
8 நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ 12
9 பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ 12
10 மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ 12
11 யா யு யூ யோ யௌ 6
12 0
13 0
14 வா வி வீ வெ வே வை வௌ 8
15 0
16 0
17 0
18 0

மொழிக்கு முதலாக வரும் 105 எழுத்துகளின் வரிசைமுறையில் அகராதிச் சொற்கள் இடம்பெறினும் ஒரு சொல்லில் பின்வரும் எழுத்துகளிலும் அகரநிரல் முறைகொண்டு அவை முறைப்படுத்தப்பெறும். அகரவரிசையை எடுத்துக்கொண்டால் அகரத்தின் பின் ககரம் முதல் னகரம் ஈறான 18 மெய்வருக்க எழுத்துகளும் வரும். இவை ககரம் முதலிலும் னகரம் ஈற்றிலும் அமையுமாறு எழுத்து வரிசை முறையில் அடைவு செய்யப்பெற்றிருக்கும்.

இரண்டாம் எழுத்தாகக் ககர வருக்கம் முதல் னகர வருக்கம் வரை மெய்யும் உயிர்மெய்யும் வருதல் இயல்பு. இவற்றுள் எதனை முதலில் வைப்பது என்பதனையும் கவனித்தல் வேண்டும். சதுரகராதி முதல் சென்ற நூற்றாண்டில் வந்த அகராதிகள் எல்லாம் உயிர்மெய்யை முதலில்கொண்டு மெய்யை ஈற்றில் அமைத்து வந்துள்ளன. தமிழ்ச்சங்க அகராதி எனப்படும் தமிழ்ச் சொல்லகராதி என்னும் பேரகராதியை ஆக்கிய நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளை இரண்டாம் எழுத்தாக முந்திய அகராதிகள் கொண்ட முறையை விடுத்து, மெய் முன்னாகவும் உயிர்மெய் பின்னாகவும் அமையுமாறு முறைப்படுத்தினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வழிகாட்டிய இவர்தம் அகரநிரல் முறையையே இந்த நூற்றாண்டில் வந்த அகராதிகள் பலவும் பின்பற்றலாயின. சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி கதிரைவேற்பிள்ளை முறையைப் பின்பற்றியது.