முகப்பு | தொடக்கம் |
சொல்விளக்க நுட்பங்களால் சுவையேற்றுவதிலும் முடியரசனாரின் தனித்திறம் பளிச்சிடுகிறது. ஒற்றுமை, ஒருமை இரண்டும் ஒன்றா? இரண்டுக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டைப் பாவலர் கூறுகிறார்: “ ஒன்றுடன் மற்றொன்று இணைவது ஒற்றுமை. சொல் விளக்கச் சுவை வழங்குவதோடு, சொல்வளப் பெருக்கத்திற்கும் தமது ஆழ்ந்தகன்ற கல்விப்பரப்பால் நூல் முழுதும் வழியமைத்துள்ளார் முடியரசனார். ‘உதுக்காண், அரத்தம், பொந்திகை’ எனப் பழந்தமிழ்ச் சொற்கள் பலவும் இந்நூலுள் உயிர்கொண்டு உலவுகின்றன. கதைப்போக்கில் பாடற்போட்டி ஒன்று வருகிறது. ‘உண்டாலம்ம’ பாடலை இளம்பெருவழுதி எழுதி முதற்பரிசு பெறுவதாகக் கதையோடு புறநானூற்றைப் பொருத்திவிடுகிறார் பாவலர். இரண்டாம் பரிசு பெறும் சுரும்பார்குழலியின் பாடலாகச் சங்க இலக்கியச் சாயலில் முடியரசனார் வழங்கும் பாடல் நடைமுறை வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. “ மரக்கலம் நடுக்குற அலைக்கும் மாகடல் |
மேல் | அடுத்த பக்கம் |