முகப்பு | தொடக்கம் |
சுரும்பார் குழலியின் குரலாக முடியரசனார் தரும் இப்பாடல், பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ‘நூறாசிரியம்’ பாடல்களோடு ஒப்பிட்டு மகிழத் தூண்டுகிறது. போர்க்களக் காட்சியைப் பாவலர் விவரிக்கும் இந்நூலின் காட்சிகள், போர்வீரருள் ஒருவராய் நாமும் நிற்கும் உணர்வை ஊட்டுகின்றன: ‘ பண்ணோடு பணியாடப் எனத் தேர்ப்படைக் காட்சி நம்கண்முன் விரிகிறது. நெட்டுமதில் முற்றுகையில் கட்டுமரம் இட்டகத எனும் யானைப்படைக் காட்சி நமக்கே அச்சமூட்டுகிறது. “ முறுகுசி னத்துடன் அடிகள்பெ யர்த்தொரு எனக் குதிரைப் படைக் காட்சி அவற்றின் ஓட்டத்தோடு நம்மையும் ஓடவைக்கிறது. ‘ வீரர் நெஞ்சில் வேல்கள் பாய எனும் காலாட்படைக்காட்சியில் வீரர் நடக்கும் ஓசை நம் காதில் கேட்கும். |
மேல் | அடுத்த பக்கம் |