|
கடலில் அணிவகுக்கும் கப்பல் படையில் வங்கம், அம்பி, மதலை, பாறு, பஃறி, தோணி, தொள்ளை எனப் பல்வகைக் கப்பல்களும் போருக்குப் புறப்படுகின்றன.
“ வங்கம் அம்பி மதலை என்பன எங்கும் கடலலை எதிர்ந்து செல்க. பாறு பஃறி தோளி தொள்ளை கூறு கூறாக் கூடிச் செல்க பாதை முதலாப் பாய்மரக் கலங்கள் போதம் பலவும் புணையொடு புகுக”
போருக்குச் செல்லும் இளம்பெருவழுதி வெற்றி பெற்று விட்டான் என்ற செய்தி வருகிறது. கூடவே இன்னொரு செய்தியும் வந்து இடிபோல் நெஞ்சில் இறங்குகிறது. காற்றில் சிக்கிய கப்பல் கவிழ்ந்து விடுகிறது. கப்பலோடு இளம்பெருவழுதியின் வாழ்வும் கடலில் மூழ்கி விடுகிறது. உயிரிழந்தான் என்னும் செய்தியே அது!
ஒரே மகனைப் பறிகொடுத்ததால் துயரக்கடல் பெற்றோரைச் சூழ்ந்து கொள்கிறது.
“ பாண்டியனார் குலக்கொழுந்தே! பாடல் சான்ற பைந்தமிழின் தவக்கொழுந்தே! பண்ப னைத்தும் ஈண்டியவோர் செயலகமே! எடுக்கும் போரில் இணையில்லாப் புறப்பொருளே! எழிலின் தோற்றம் பூண்டிருந்த நல்லுருவே! எனது நெஞ்சுள் பூத்திருந்த பொன்மலரே! புலம்ப விட்டு மாண்டனையோ நன்மகனே!”
ஆறாத் துயருடன் புலம்பும் பெற்றோரின் அழுகையொலி நம்நெஞ்சை உருக்குகிறது.
மகனை இழந்த துயரின் கடுமையே, மன்னன் பாண்டியனுக்குப் போரின் கொடுமையைப் புரிய வைக்கிறது.
‘ இறந்தோர் உடலில் பிறந்ததே வெற்றி. பரந்தடு போரில் பிறந்ததே கொற்றம்
|