| 15. | தழீஇக் கோடலுந் தழையேற் பித்தலும் கையுறை யெதிர்ந்தமை மெய்பெற விசைத்தலும் விரும்பிட முரைத்தலுங் குறியொடு நீங்கலும் புனைந்து நிலையலு நிலைமை கூறலும் பாங்கிகொண் டிகத்தலும் பகற்குறி யாகும். |
(எ-து.) தோழியிற் கூட்டத்துப் பகற்குறியாகுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பாங்கியை உணர்ந்தது முதலாகக் கொண்டு பெயர்ந்த தீறாகச்" சொல்லப் பட்டன வெல்லாம் தோழியினாகிய பகற்குறிக் கூட்டமா மென்றவாறு.| 1. | “நோக்கினும் பிறர்முக நோக்காள் சாரினும் பூக்குழன் மடந்தை தோள்சா ரும்மே அன்ன தலையளி யுடமையின் இன்னுயிர்த் தோழியிவ் வேந்திழை யிவட்கே” (20) (நம்பி. 133, மேற்; களவியற்.. 25, மேற்.) |
என்பது பாங்கியை உணர்ந்தது.| 2. | “1புனையிழை யாயமொடு பூம்பந் தெறியவும் 2நனைமலர் ஞாழ லொள்வீ கொய்யவும் வருந்தினள் கொல்லோ மடந்தை பரந்தன்று மாதோ பண்புகெழு நிறனே”(21) (களவியற்.. 31, மேற்.) |
என்பது வேறுபாடு கண்டு பாங்கி ஐயுற்றது.| 3. | “கண்ணி தகைசிறந் தனவே தண்ணென் பூந்தழை செவ்விய போலும் வாங்கிருங் கூந்தலு மல்குலும் பொலிய ஏந்தினிர் கொண்மின்யாம் விழைகுவம் பெரிதே” (22) (நம்பி 144, மேற்; களவியற்.. 29 மேற்.) | என்பது தலைமகன் இரந்து குறையுற்றது.
1. ‘பந்துவழிப் படர்குவ ளாயினு நொந்துநனி, வெம்பும் னளியன்” (அகநா. 153:3. 4) 2. “கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்” (அகநா. 216: 8)
|