பக்கம் எண் :
 
தமிழ்நெறி விளக்கம் 9
4. “வைகல் வைக லைய விவ்வழிக்
கையுறை யேந்தினிர் வருதிர் மற்றஃ
தறிகலம் யாமெமர்க் குரைப்பிற்
பெறுகுவி ரெந்தை பெருவண் மையனே” (23)

    என்பது தலை மகனைத் தோழி வினாயிற்று.
 
5. 1அம்புமுகங் கிழித்த வெம்புண் வாய
கலைமான் போந்தன வுளவோநும்
மடமா னோக்க மரீஇயின படர் ந்தே” (24)
                            (களவியற்.. 30, மேற்.)

    என்பது கவர்ந்துநின்ற தோழியை மதியுடம்படுப்பானுற்றுத் தோழியும் தலைமகளும் உடனாயவழித் தலைமகன் வினாயது.
 
6.2உரைமி னீர்ம னெமக்கே வரையிடை
அரும்படர்க் கவலை நீந்திப்
பெருந்துய ரருப்பம் பெயர்தரு நெறியே”(25)
                                  (களவியற்.. 30. மேற்.)

     என்பது வழிவினாயது.
 
7.3கையது செயலையந் தழையே வினாய
தெய்புண் வாய மாவே கைவிட்
டகலா னம்மவிவ் வகன்புனம்
தகையோ னுள்ளிய தறியலம் பெரிதே”(26)
                   (நம்பி. 140, மேற்; களவியற். 33, மேற்)
     என்பது தலைமகனைத் தோழி ஐயுற்றது.


1. “தத்திச்   சிலைத்தெழுந்து   தார்குருதி    மெய்சோர, இத்திக்கி  லிந்தப் புனத்திடையே -   தித்தித்தேன்,   போந்தனைய   சோர்குழலீர்  யானெய்த போதொருமான், போந்ததே யிவ்வழியே புக்கு” (பழம்  பாட்டு); “தண்டு புரை கதிர்த் தாழ்குரற் செந்தினை, மண்டுபு, கவரு மானகிளி மாற்றும், ஒண்டொடிப் பணைத்தோ ளொண்ணுத   லிளையீர், கண்டனி   ராயிற் கரவா   துரைமின் கொண்டன குழவி னீங்கி மண்டிய, உள்ளழி   பகழியொடுயங்கியோர், புள்ளி மான்கலை போகிய நெறியே” (தொல். களவு. 11. ந. மேற்.)

2. “வெல்லுந் திறநினைந் தேற்றார்  விழிஞத்து    விண்படரக்,    கொல்லின் மலிந்தசெவ் வேல்கொண்ட கோன்கொல்லிச் சாரலின்றேன், புல்லும் பொழிலிள வேங்கையின் கீழ் நின்ற பூங்குழலீர், செல்லு    நெறியறி    யேனுரையீர்நுஞ் சிறுகுடிக்கே” (பாண்டிக்கோவை.)

3.“வில்லேறு  பட்ட படியே வினைவேறு, சொல்வேறு பட்டபடி தோற்றுவிக்க
- மல்வேறு, போகாத தோளும் பொலிவழிய நம்புனம் விட்டேகாத  தென்கோ லிவர்”    (கிளவித்தெளிவு);  மழையும்  புரைவண்கை  வானவன்  மாறன்மை தோய்பொதியில், வழையுங் கமழு  மணிநெடுங்  கோட்டு,  வண் சந்தனத்தின், தழையும் விழைதகு கண்ணியு மேந்தியித் தண்புனத்