‘பூமேவு.... பகர்ந்திடுவன்யான்’ என்றது வணக்கம்; “வணக்க மதிகார மென்றிரண்டுஞ் சொல்லச், சிறப்பென்னும் பாயிர மாம்.” ‘யாப்பு விதி...எழுத்தாம்’ என்றது, யாப்பினதுவிதி எழுத்து முதல் எட்டாம் என்றவாறு. அவற்றுள்; எழுத்தாவன:-குறிலெனவும் நெடிலெனவும் மெய்யெனவும் உயிர்மெய்யெனவும் உயிரெனவும் ஆய்தமெனவும் குற்றிய லுகரமெனவும் குற்றியலிகரமெனவும் ஐகாரக்குறுக்கமெனவும் ஒளகாரக்குறுக்கமெனவும் வல்லினமெனவும் மெல்லினமெனவும் இடையினமெனவும் உயிரளபெடையெனவும் ஒற்றளபெடையெனவும் வரும். இவற்றுள்; குறிலாவன: -அ இ உ எ ஒ என ஐந்தாம்; நெடிலாவன:- ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என ஏழாம்; மெய்யாவன:- க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன எனப்பதினெட்டாம். உயிர்மெய்யாவன:- இவற்றின்மேல் உயிர் ஏறியவை; க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ எனவரும். இப்படியே, பதினெட்டொற்றின் மேலும் பன்னீருயிரும் ஏற, இருநூற்றொருபத்தாறெழுத்தாம். உயிராவன:- அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள எனப் |