பன்னிரண்டாம். ஆய்தமாவன:- எஃகு கஃசு கஃடு கஃது கஃபு கஃறு எனவரும்.குற்றியலுகரமாவன:- நாகு காசு காடு காது காபுகாறு என நெடிற்கீழும், நாக்கு காச்சு காட்டு காத்து காப்பு காற்று என நெடிலொற்றின் கீழும், வரகு முரசு முருடு மருது துரபு கவறு எனக்குறிலிணைக்கீழும், அரக்கு பொரிச்சு தெருட்டு குருத்து பொருப்பு சிரற்று எனக்குறிலிணையொற்றின்கீழும், அசோகு பலாசு மலாடு கொடாது புதாபு விராறு எனக்குறினெடிற்கீழும், தமாக்கு தடாச்சு பனாட்டு கெடாத்து புதாப்பு விராற்று எனக் குறினெடிலொற்றின் கீழும், கக்கு கச்சு கட்டு கத்து கப்பு கற்று எனக்குற்றொற்றின் கீழும் குற்றியலுகரம் வந்தவாறு கண்டுகொள்க. இனி, குற்றியலிகரம் வருமாறு:- நாகியாது காசியாது காடியாது காதியாது காபியாது காறியாது எனவும் பிறவு மேற்கூறியவாறும், கேண்மியா சென்மியா எனவும் வரும். பிறவும் வருவன இவ்வாறொட்டிக்கொள்க. இனி, ஐகாரக்குறுக்கமாவன:- ஐப்பசி மைப்புறம்; மடையன் உடைவாள்; குவளை தவளை தினை பனை என மூவிடத்தும் முறையே குறுகிவந்தன. இனி, ஒளகாரக்குறுக்கமாவன:- மௌனம் மௌலி கௌவை என முதற்கட் குறுகினவாறு. வல்லினமாவன:- கசடதபற. மெல்லினமாவன:- ஙஞணநமன. இடையினமாவன:- யரலவழள. இனி, உயிரளபெடையாவன:-வாஅகை ஈஇகை ஊஉகம் ஏஎரி தைஇயல் ஓஒதை ஒளஉவியம் என முதனிலையளபெடை வந்தவாறு. பதா அகை செலீஇயர் உலூஉகம் பரேஎரி வளைஇய விரோஒதம், மனௌஉகம் என இடைநிலையளபெடை வந்தவாறு. குராஅ குரீஇ குழூஉ எனேஎ விளைஇ அரோஒ அநௌஉ என இறுதிநிலையளபெடை வந்தவாறு. ஒற்றளபெடை வருமாறு:- மங்ங்கலம் மஞ்ஞ்சு மண்ண்ணு பந்ந்து அம்ம்பு மின்ன்னு தெவ்வ்வர் வெய்ய்யர் செல்ல்க கொள்ள்கை எஃஃகு எனக் குறிற்கீழும், அரங்ங்கம் முரஞ்ஞ்சு முரண்ண்டு பருந்ந்து அரும்ம்பு முரன்ன்று குரவ்வ்வை அரய்ய்யர் குரல்ல்கள் திரள்ள்கள் வரஃஃகு எனக்குறிலிணைக்கீழும், அளபெடை வந்தவாறு. பொன்ன் மடங்ங் கலந்த என இறுதிநிலையளபெடை வந்தவாறு. இவற்றுக்குப் பிறசூத்திரம்:- “யாப்பும், பாட்டுந் தூக்குந் தொடர்புஞ் செய்யுளை நோக்கிற் றென்பர் நுணங்கி யோரே.” “எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத் தசைத்திசை கோடலி னசையே யசையியைந்து சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு தட்டு நிற்றலிற் றளையே யத்தளை யடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு தொடுத்துமுத லாயிற் றொடையே யத்தொடை பாவி நடத்தலிற் பாவே பாவொத் |