தினமாய் நடத்த லினமெனப் படுமே” “பந்தந் தளையின் பாற்பெய ராகும்” “அஇ உஎ ஒக்குறி லைந்தே” “ஆஈ ஊஏ ஐஓ ஒளநெடில்” “ககர முதல னகர விறுவாய்ப் பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப” “மெய்யுடம் புறுப்பொற் றிவைதா மொருபொருள் செய்யு மென்று செப்பினர் புலவர்” “உயிரீ ராறே மெய்ம்மூ வாறே யம்மூ வாறு முயிரோ டுயிர்ப்ப யிருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே” “அகர முதல ஒளகார விறுவாய்ப் பன்னிரண் டெழுத்து முயிரென மொழிப” “குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே” “அஃகேன மாய்தந் தனிநிலை புள்ளி யொற்றிப் பால வைந்து மிதற்கே” “நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை யொற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென் றேழ்குற் றுகரக் கிடனென மொழிப” “எழுவகை யிடத்துங் குற்றிய லுகரம் வழுவின்று வரூஉம் வல்லா றூர்ந்தே” “வல்லெழுத் தாறோ டெழுவகை யிடத்து முகர மரையாம் யகரமோ டியையி னிகரமுங் குறுகு மென்மனார் புலவர்” “யகரம் வரக்குற ளுத்திரி யிகரமு மசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய” “தற்சுட் டளபொழி யைம்மூ வழிய நையு மௌவு முதலற் றாகும்” “இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடி லளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே” “ஐ ஒள வென்னு மாயீ ரெழுத்திற் கிகர வுகர மிசைநிறை யாகும்” “ஙஞண நமன வயலள வாய்தம் அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை |