பெருவரைத்தோ ளருளுதற் கிருளிடைத் தமியையாக் கருவரைத்தோள் கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ. பாங்கனையே வாயிலாப் பல்காலும் வந்தொழுகுந் தேங்காத கரவினையுந் தெளியாத விருளிடைக்கட் குடவரைவேய்த்தோளிணைகள்குளிர்ப்பிப்பான்றமியையாய்த் தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ. இவைமூன்றுந்தாழிசை. தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில். போதுறு நறுவிரைபுதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி. தீதுறு திறமறு கெனநனி துணையொடு சினமொடு பிணைவன துறை. மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர் புடையது கடல். இவை நான்கும் அராகம். கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனா லிடுங்கழி யிராவருதல் வேண்டாமென் றுரைத்திலமோ. கருநிறத் தெறுழ்வலிக் கராம்பெரி துடைமையா விருணிறத் தொருகான லிராவார லென்றிலமோ. நாற்சீரீரடியி ரண்டபோதரங்கம். நாணொடு கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே. துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே. அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே. நயப்பொடு கழிந்தன்றா னனவினும் நன்னுதற்கே. இவை, நாற்சீரோரடி நான்காம்போதரங்கம். அத்திறத்தா லசைந்தன தோள்; அலர்தற்கு மெலிந்தனகண்; பொய்த்துரையாற் புலர்ந்த முகம்; பொன்னிறத்தாற் போர்த்த முலை; அழலினா லசைந்த நகை; அணியினா லொசிந்த திடை; குழலினா லவிர்ந்த முடி; குறையினாற் கோடிற்று நிறை; இவை, முச்சீரோரடி எட்டம் போதரங்கம். உட்கொண்ட தகைத்தொருபால்; உலகறிந்த வலத்தொருபால்; கட்கொண்ட றுளித்தொருபால்; கழிவெய்தும்படித்தொருபால்; பரிவுறூஉந் தகைத்தொருபால்; படர்வுறூஉம் பசப்பொருபால்; இரவுறூஉந் துயரொருபால்; இளிவந்த வெழிற்றொருபால்; மெலிவுறூஉந்தகைத்தொருபால்;விளர்ப்புவந் தடைந்தொருபால்; பொலிவுசென் றகன்றொருபால்;பொறைவந்துகூர்ந்தொருபால்; காதலிற் கதிர்ப்பொருபால்; கட்படாத் துயரொருபால்; ஏதிலர்ச்சென்றணைந்தொருபால்;இயனாணிற் செறிவொருபால்; |