விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய் புரையு நின்னுடை. இவை பேரெண். கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை. தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை. யொலியிய லுவண மோங்கிய கொடியினை. வலிமிகு சகட மாற்றிய வடியினை. இவை அளவெண். போரவுணர்க் கடந்தோய் நீஇ; புணர்மருதம் பிளந்தோய் நீஇ;நீரகல மளந்தோய் நீஇ; நிழறிகழும் படையோய் நீஇ. இஃதிடையெண். ஊழி நீஇ; உலகு நீஇ; உருவு நீஇ; அருவு நீஇ; ஆழி நீஇ; அருளு நீஇ; அறமு நீஇ; மறமு நீஇ; இவை சிற்றெண். என வாங்கு-தனிச்சொல். அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன் றொன்றுமுதிர் கடலுலக முழுதுட னொன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவோ-இது சுரிதகம்.
இஃது எட்டும் பதினாறுமென்று சொல்லப்பட்டவை குறைந்து முச்சீரடி நான்கும் இருசீரடியெட்டுமாய்வந்த அம்போதரங்க வொத்தாழிசைக்கலிப்பா. எட்டும் பதினாறுமென்பன குறையாமல்வந்தவாறு யாப்பருங்கலவிருத்தியுட் கண்டுகொள்க. “விளங்குமணிப் பசும்பொன்னின்விரித்தமைத்துக்கதிர்கான்று துளங்குமணிக்கனைகழற்காற்றுறுமலர்நறும்பைந்தார்ப் பரூஉத்தடக்கை மதயானைப் பகட்டெழி லெரிகுஞ்சிக்குரூஉக்கொண்டமணிப்பூணோய்குறையிரந்துமுன்னாட்கண் மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்குந்தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரகேள். இது தரவு.
காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகிமாட்சியாற் றிரியாத மரபொத்தாய் கரவினாற் பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய வணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ. அன்பினா லமுதளைஇ யறிவினாற் பிறிதின்றிப் பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப் |