பக்கம் எண் :
 
30சிதம்பரப்பாட்டியல்

சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பரோ நலமிலரே.

சிலம்படைந்த வெங்கானஞ் சீரிலவே என்பவால்
புலம்ப டைந்த நலந்தொலையப் போவரோ பொருளிலரே.
                             
இவை மூன்றுந்தாழிசை
என வாங்கு-தனிச்சொல்      

அருளெனு மிலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்
பன்னெடுங் காலமும் வாழியர்
பொன்னெடுந்தேரொடுந்தானையிற்பொலிந்தே”
இதுசுரிதகம்.

இது,    தரவு மூன்றடியாய்த் தாழிசை மூன்று மிரண்டடியாய்த் தனிச்
சொற்பெற்று மூன்றடியாசிரியச் சுரிதகத்தாலிற்ற நேரிசை யொத்தாழிசைக்
கலிப்பா.

“கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக்
கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய
அழல்விரி சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத்
தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க
வார்புனல் இழிகுருதி யகலிட முடனனைப்பக்
கூருகிரான்மார்பிடந்தகொலைமலி தடக்கையோய்”
இதுதரவு.

“முரைசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப்
புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்லர்
அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ.

கலியொலி வியனுலகங் கடந்துட னனிநடுங்க
வலியிய லவிராழி மாறெதிர்த்த மருட்சோர்வு
மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கிச்
சேணுயர் நெடுவிசும்பிற் சிதைத்ததுநின் சினமாமோ.

படுமணி யினநிரைகள் பரந்துட னிரிந்தோடக
கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு
வரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறல் வேறாக
எருமலி பெருந்தொழுவி லிறுத்ததுநின் னிகலாமோ.

                        [இவைமூன்றுந் தாழிசை]

இலங்கொளி மரகத வெழின்மிகு வியன்கடல்
வலம்புரித் தடக்கை மாஅ னின்னிறம்.