பக்கம் எண் :
 
 மூலமும் உரையும்29

“இடங்கைவெஞ்சிலை வலங்கைவாளியின்” -  இஃது  ஒன்பதின்சீர்க்
கழிநெடிலடியான் வந்த ஆசிரியவிருத்தம்.

“கொங்குதங்கு    கோதையோதி மாதரோடு”   -இது    பதின்சீர்க்
கழிநெடிலடியான் வந்த ஆசிரியவிருத்தம்.                       (3)

 

(9)

ஆசிலிசை துள்ளலள வடிகலிப்பாத் தரவொன்
   றடைவிற்றா ழிசைமூன்றுந் தனிச்சொல்சுரி தகமா
மாசிலநே ரிசையொத்தா ழிசைக்கலிப்பா வளவே
   மன்சிந்து குறளடித்தா ழிசைப்பின்பு வருமே
லேசிலம்போ தரங்கவொத்தா ழிசைக்கலிப்பா விவற்றோ
   டிடையரா கம்வரில்வண் ணகவொத்தா ழிசையே
பேசியவெண் பாவியைந்து சிந்தடியீற் றடியாய்ப்
   பிறதளைதன் றளையோசை பெறுவதுவெண்கலிப்பா.   (4)
 

“ஆசிலிசை    துள்ளலளவடி கலிப்பா” எ-து, துள்ளலோசையினையு
மளவடியினையு முடையது கலிப்பா;  “தரவொன்றடைவிற்றாழிசைமூன்றுந்
தனிச்சொல்சுரிதகமா    மாசிலநேரிசையொத்தாழிசைக்கலிப்பா”    எ-து,
தரவொன்றும்  தாழிசைமூன்றுந்  தனிச்சொல்லுஞ் சுரிதகமுமாய் வருவது
நேரிசை     யொத்தாழிசைக்கலிப்பா;       “அளவே      மன்சிந்து
குறளடித்தாழிசைப்    பின்பு    வருமேல்    ஏசில்    அம்போதரங்க
வொத்தாழிசைக்கலிப்பா”  எ-து,  முன்போலத்தரவுந் தாழிசையும், பின்பு
நாற்சீரடியானு  முச்சீரடியானும் இருசீரடியானும் வந்து  அம்போதரங்கமு
முடைத்தாய்த்     தனிச்சொல்லுஞ்சுரிதகமும்     பெற்று     வருவது
அம்போதரங்கவொத்தாழிசைத்தாழிசைக்கலிப்பா: “இவற்றோடிடைஅராகம்
 வரில்   வண்ணகவொத்தாழிசையே”என்பது,இந்த      அம்போதரங்க
வுறுப்பையுமுடைத்தாய்த்தாழிசைக்குமம்போதரங்கத்துக்கு      மிடையே
அராகவுறுப்பைப்  பெற்றுவருவது  வண்ணக    வொத்தாழிசைக்கலிப்பா.
“பேசியவெண்பாவியைந்து சிந்தடியீற்றடியாய்ப்    பிறதளை        தன்
றளையோசை        பெறுவது       வெண்கலிப்பா”        என்பது,
வெண்பாவினடைத்தாயீற்றடிசிந்தடியாய்த்              தன்றளையாகிய
கலித்தளையையும்              பிறதளையையும்        பெற்றுக்கலி
யோசையினையுடைத்தாய் வருவது வெண்கலிப்பா:-இவற்றிற்குதாரணம்
 

“வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூணொ டுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ”
                                       இது தரவு.

சூருடைய கடுங்கடங்கள் சொலற்கரிய வெண்பவாற்
பீருடைய நலந்தொலையப் பிரிவரோ பெரியவரே.