கொன்றார்ந் தமைந்த குருமுகத் தெழினிறக் குருதிக் கோட்டின விருந்தாட் பெருங்கைக் குன்றாமென வன்றாமெனக் குமுறா நின்றன கொடுந்தொழில் வேழம் வென்றார்ந் தமைந்த விளங்கொளி யிளம்பிறை துளங்குவா ளிலங்கெயிற் றழலுளைப் பரூஉத்தா ளதிரும் வானென வெதிரும்கூற்றெனச் சுழலா நின்றன சுழிக்கண் யாளி சென்றார்ந் தமைந்த சிறுநுதி வள்ளுகிர்ப் பொறியெருத் தெறுழ்வலி புலவுநா றழல்வாய்ப் புனலாமெனக்கனலாமெனப்புகையாநின்றன புலிமானேற்றை என்றாங்கிவையிவை யியங்கலினெந்திறத் தினிவரல்வேண்டலந் தனிவரலெனத்தலை விலக்கனிறுவரை மிசையெறிகுறும்பிடை யிதுவென்னெனவது நோனார்கரவிர விடைக்களவுளமது கற்றோரது கற்பன்றே. இது நான்கடியாய் முதலடியும் மூன்றாமடியும் பதினான்கு சீராய் ஏனையடியிரண்டும் பதினாறுசீராய் இடையிடை குறைந்துவந்த வாசிரியத்துறை. “இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா வரங்க மணிபொழிலா வாடும்போலு மிளவேனி லரங்க மணிபொழிலா வாடுமாயின் மரங்கொன்மணந்தகன்றார் நெஞ்சமென்செய்த திளவேனில்” இது நான்கடியாய் இடையிடை குறைந் திடைமடக்காய்வந்த ஆசிரியத்துறை. “கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதிராயி னரையிருள் யாமத் தடுபுலி யேறஞ்சி யகன்று போக நரையுரு மேறுநுங் கைவேலஞ்சு நும்மை வரையர மங்கையர் வௌவுத லஞ்சுதும் வாரலையோ” இது நான்கடியா யீற்றயலடி குறைந்துவந்த ஆசிரியத்துறை. “இறைக்குமஞ்சிறைப்பறவைகள்”-இஃதறுசீர்க்கழி நெடிலடியான வந்த ஆசிரிய விருத்தம். “கணிகொண்டலர்ந்த” இஃதெழுசீர்க் கழிநெடிலடியான் வந்த ஆசிரியவிருத்தம். |