பக்கம் எண் :
 
 மூலமும் உரையும்27

யிரப்போர் கையுளும் போகிப் புரப்போர்
புன்கண் பாவை சோர வஞ்சொனுண் டேர்ச்சிப்
புலவர் நாவிற் சென்று வீழ்ந்தன்றவ
னருநிறத் தியங்கிய வேலே
யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனி, பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு மில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன்
றீயாது வீவு முயிர்தவப் பலவே”

இவை    இடையடிக   ளொருசீரு   மிருசீருங்   குறைந்துவந்தமையா
லிணைக்குறளாசிரியப்பா.
 

“சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளி ராரணங் கினரே
வார லெனிலே யானஞ் சுவலே
சார னாட னீவர லாறே”

இஃது     எல்லாவடியும்,     முதனடுவிறுதியாக     வுச்சரித்து,
அடிமறிமண்டிலமாமாறு கண்டு கொள்க.

“கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவ
னின்றுநம் மானுள் வருமே லவன்வாயிற்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ”

“பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவ
னீங்குநம் மானுள் வருமே லவன்வாயி
லாம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ”

“கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவ
னெல்லைநம் மானுள் வருமே லவன்வாயின்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ”
  

இவை   மூன்றடியா  யொருபொருண்மேன்  மூன்றடுக்கி  வந்தமையால்
ஆசிரியத்தாழிசை.

“வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை
நீனிற வண்ணனின் னிறைகழ றொழுதனம்”

இது தனியேவந்த ஆசிரியத்தாழிசை.