“வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவ ளுயிர்த வச் சிறிது காமமோ பெரிதே” இஃது அளவடியாய் எல்லாவடியுந் தம்முள் ஒத்து வந்தமையால் நிலைமண்டில ஆசிரியப்பா. “நீரின் றண்மையுந் தீயின் வெம்மையும் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சார னாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாவே” *“சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே அம்பொடு வேனுழை வழியெல்லாம் தானிற்கு மன்னே நரந்த நாறுந் தன்கையாற் புலவு நாறு மென்றலை தைவரு மன்னே யருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
* உரையாசிரியர், இதனைப் பதினேழடி யாசிரியமெனக் கொண்டு இதனுள் “ஏழாமடியும் பன்னிரண்டாமடியும் முச்சீரான் வந்தன; மூன்றாமடி முதலாக ஆறாமடியீறாகிய நான்கடியும் பதினாலாமடியும் ஐஞ்சீரான் வந்தன; இரண்டாமடியும் பதினொன்றாமடியும் ஆறுசீரான் வந்தன; ஏனைய நான்கு சீரான் வந்தன; இவ்வாறு வருதலின் அடிமயங்காசிரியமாயிற்று” என்றார் (தொல் செய்யுளியல். “வெண்டளை விரவியும்” என்பதனுரை.) நச்சினார்க்கினியர் “இதனுள் “நரந்த நாறுந் தன்கையால்” எனவும் “அருநிறத் தியங்கிய வேலே” எனவும் தனித்துவந்தன; “பெரியகட் பெறினே” என்பது சொற்சீரடி. இதனைக் குறளடியாக்கிக் குறளடியும் வரும் என்பர் பின்பு நூல்செய்த ஆசிரியர்” (யாப்பருங்கல விருத்திகாரர்) என்றனர். (தொல், செய், “இடையும் வரையார்” என்பதனுரை.) |