என்பது:-- “பரவகவ .....நேரிசை “ என்பது, அகவலோசையு மளவடியையு முடைத்தாய் ஈற்றயலடி முச்சீராய் வருவது நேரிசை யாசிரியப்பா; “எவ்வடியு மளவொத்த லருநிலை மண்டிலம்” எ-து,எல்லாவடியுந்தம்முள் ளொத்துமுடிவது நிலைமண்டில வாசிரியப்பா; “இடைச்சீர்குன்றலிணைக் குறளாம்” எ-து இடையிடையே இருசீரடியானும் முச்சீரடியானும் வருவது, இணைக்குறளாசிரியப்பா ; “ ஆதி நடு வந்தமுறி னடிமறிமண்டில வாசிரியம்” எ-து, எல்லாவடியும் முதனடு விறுதியாக உச்சரித்தாலும் பொருள் ஒத்து முடிவது அடிமறி மண்டில வாசிரியப்பாவாம்; “மூன்றடியொத்தல் தாழிசை” எ-து, மூன்றடியுந் தம்முள்ளொத்து வருவது ஆசிரியத்தாழிசை; “நான்கடியாய்ச் சீரிடை குறைதலிடை மடக்கலீற்றயலின் மருவடி நைவது துறை” எ-து, நான்கடியா யிடையிடை சீர்குறைந்து மிடைமடக்கியு மீற்றயலடிகுறைந்தும் வருவது ஆசிரியத்துறை; “நான்கடியொத்தாறாதி வளர்சீர்கள் பலவருத லாசிரியவிருத்தம்” எ-து, நான்கடியுந் தம்மொள்ளொத்து அடிகடோறும் அறுசீர்முதலான சீரையுடைத்தாய்வருவது ஆசிரியவிருத்தம். இவற்றிற்கு உதாரணம்:- “அணிமல ரசோகின் றளிர்நலங் கவற்றி யரிக்குரற் கிண்கிணி யரற்றுஞ் சீறடி யம்பொற் கொடிஞ்சி நெடுந்தே ரகற்றி யகன்ற வல்கு லந்நுண் மருங்கு லரும்பிய கொங்கை யவ்வளை யமைத்தோ ளவிர்மதி யனைய திருநுத லரிவை யயில்வே லனுக்கி யம்பலைத் தமர்த்த கருங்கய னெடுங்க ணோக்கமென் றிருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே.” இஃதீற்றயலடி முச்சீரான் வந்தமையால் நேரிசை யாசிரியப்பா. |