| |
இதுவுமது
|
|
|
| 14.
|
ஏனைக்
குகர முதலிரண் டுந்திரு வாதிரையாம்
1ஆன வவற்றி னடைவொரு மூன்றும் புனர்ப்பூசமாய்ப்
போனபின் நின்றன மூன்றெழுத் தும்பூசம் என்பபொய்யா
வானக் கருங்குழல் வம்பார் வனமுலை வாணுதலே. |
(உரை I). எ - ன், கு, கூ என இவை இரண்டும்
திருவாதிரை; கெ, கே,
கை இவை மூன்றும் புனர்பூசம்; கொ, கோ, கௌ இவை மூன்றும் பூசம்
எ - று.
(பி-ம்.)
1போனற் கெகர முதன்மூன்று மேர்புனர்ப் பூசமென்ப
தானக்
கொகர முதன் மூன்றும் பூச மெனத்தகைவர் (14)
| |
இதுவுமது
|
|
|
| 15. |
*ஏய்ந்த சகர முதனா லெழுத்தும் இரேவதியாம்
ஆய்ந்த சுகர முதலைந் தெழுத்தும் அசுபதியாம்
பாய்ந்த சொகர முதன்மூன் றெழுத்தும் பரணியென்பர்
வேய்ந்த ஞகர ஞொகரஞா வான அவிட்டமின்னே. |
(உரை
I). ச, சா, சி, சீ இவை நான்கும் இரேவதி. சு, சூ, செ, சே, சை
இவை ஐந்தும் அசுபதி. சொ, சோ, சௌ இவை மூன்றும் பரணி, ஞ, ஞா,
ஞொ இவை மூன்றும் அவிட்டம் எ - று.
| (பி
- ம்.) |
1
ஏய்ந்த சகர மிரேவதி நாண்முதல் மூன்றினுக்கு
வாய்ந்த வெழுத்தொரு நான்கைந்து மூன்றா
[மவற்றின்வர்க்கத்
தாய்ந்தஞ மூன்று மவிட்டமீ றாயின வஞ்சனத்தைத்
தோய்ந்து குழையைத் தொடருந் தடங்கட்
டுடியிடையே.
|
உரை
I உள்ள பிரதியிற் கண்டது இது. (15)
| |
இதுவுமது
|
| |
|
| 16. |
ஓதுந்
தகர 1வுயிர்மெய் யிரண்டேழு மூன்றடைவே
சோதி விசாகம் சதயமு மாமென் றொடர்நகர
ஆதியி லாறு மனுடமல் லாதன ஆறெழுத்தும்
ஏதமில் கேட்டைபூ ரட்டாதி யான இருவகையே. |
|