என்னும்
ஆறெழுத்தும் க்ஷத்திரியருக்கு உரியன. இவர்களுக்குப் பிரபந்தம்
பாடுமிடத்து முதற்சீர்க்கண் இந்த எழுத்து வைக்க. இவர்களுக்குத் தேவதை
இந்திரன், சூரியன், சந்திரனும் காக்கவென்று பாடுக. ல, வ, ற, ன என்னும்
நாலெழுத்தும் வைசியர்க்கு உரியன. இவர் மேற் பிரபந்த முதற் சீர்க்கு இந்த
எழுத்து வைத்துப் பாடுக. இவர்களுக்குத் தேவதை குபேரனும் யமராசனும்
காக்கவென்று பாடுக. ழ, ள என்னும் இந்த இரண்டெழுத்தும் வேளாளர்க்கு
உரியன. இவர்களுக்குத் தேவதை வருணன் காக்கவென்று பாடுக.
(கு - ரை).
காலையன் - பகலைச் செய்யும் சூரியன்; காலை சூழ்
செங்கதிர் (தக்க. 279). கண்டன - படைத்த எழுத்துக்கள். விலக்கல்ல
என்பதை, காவலர்க்கு முதலிய நான்கனொடும் கூட்டிக்கொள்க. மாலையன் -
மாலயன்; மாலும் அயனும்; எதுகை நோக்கி ஐகார மாயிற்று. நிதிசால் ஐயன்
- நிதிகள் நிரம்பிய தலைவன்; குபேரன். வேலையன் - கடலுக்குத்
தலைவனாகிய வருணன். (12)
(பி - ம்.)
1 வெள்ளாளருக்கு 2 விலக்கில்லையே
|
நாட்களுக்குரிய
எழுத்துக்கள்
|
| |
|
| 13. |
அகர
முதனான்கும் கார்த்திகை மற்றவற் றின்னடைவே
உகர முதலைந்தும் 1பூராட மாமென ஓதுவர்காண்
ஒகர முதன்மூன்று மோருத்தி ராட முயிர்மெய்யினில்
ககர முதனான்கு மோணமென் றோதுவர் கற்றவரே. |
(உரை - I). எ-ன், மொழிதரு முதலெழுத்துக்கு
உதாரணம் ஆமாறு
உணர்த்............று.
அ, ஆ, இ, ஈ இவை நான்கும் கார்த்திகை; உ, ஊ, எ,
ஏ, ஐ, இவை
ஐந்தும் பூராடம்; ஒ, ஓ, ஒள இவை மூன்றும் உத்திராட மெனக்கொள்க.
க, கா, கி, கீ இவை நான்கும் திருவோணம் எ - று.
(உரை II).
எ - து, நாட் பொருத்தமாமாறுணர்த்துகின்றது.
(பி - ம்.).
1பூராட முத்திரா டம்மொழிந்த, ஒகர முதன் மூன்று
மேய்ந்த உயிரி லுயிர்மெய்யினில் (13)
|
|
|