உயிரெழுத்துப்
பன்னிரண்டும் பிரமன் படைத்தான்; க, ங அரன்; ச, ஞ
அரி; ட, ண குமரன்; த, ந இந்திரன்; ப, ம பருதி; ய, ர மதி; ல, வ நமன்;
ழ, ள வருணன்; ற, ன குபேரன் எனக் கொள்க.
(உரை II).
எ - து, வருணமென்னும் பொருத்தம் உணர்த்.............று.
பன்னிரண்டு உயிரெழுத்தும் பிரமன் படைத்தான்..................றன
குபேரன்
படைத்தான். இப்படி உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டும் ஆக முப்பது
எழுத்துக்கும் தேவதைகள் அறிக. (11)
| |
நசநாலு
சாதிக்கும் எழுத்தும் தேவதையும்
|
| |
|
| 12.
|
காலையன்
சந்திர னிந்திரன் கண்டன காவலர்க்கு
மாலையன் சேயரன் கண்டன மாமறை யோர்க்குநிதி
சாலைய னந்தகன் கண்டன ஆகும் வணிகருக்கு
வேலையன் கண்டன 1வேளாள ருக்கு 2விலக்கல்லவே. |
(உரை
I) எ - ன், எழுத்துரிமை யுணர்த்...........................று.
ப, ம, ய, ர, த, ந இவை ஆறும் அரசருக்கு, உயிர்
பன்னிரண்டும், ச,
ஞ, ட, ண, க, ங என்னும் உயிர் மெய் ஆறும் ஆகப் பதினெட்டு எழுத்தும்
அந்தணருக்கு. ற, ன, ல, வ இவை நான்கும் வணிகருக்கு. ழ, ள இவை
இரண்டும் வோளாளருக்கு. உயிர் மெய் பதினெட்டும் நான்கு சாதிக்குமாம்,
அடைவே கொள்க. இவை தசாங்கத்தயல் வரையப் படாவெனவே, முன்பு
நஞ்செழுத்தென்று பொது வகையாலே விலக்குண்டனவற்றை இம் முறையால்
வந்தன வரையார் என, அவற்றுள் சிறுபான்மையால் வருக எ - று.
(உரை
II). எ - து................நான்கு சாதிக்கும் எழுத்துக்களும்
தேவதைகளும் ஆமாறுணர்த்................று.
உயிர் பன்னிரண்டும், க, ங, ச, ஞ, ட, ண என்று
ஆறெழுத்தும் ஆகப்
பதினெட்டெழுத்தும் பிராமணருக்கு உரியன. இவர்க்குத் தேவதை அயனும்
அரியும் அரனும் ஆறுமுகக் கடவுளும் காக்கவென்று பாடுக. த, ந, ப, ம,
ய, ர,
|