பக்கம் எண் :
 

8நவநீதப் பாட்டியல்

     (கு - ரை.) அளபு: உயிரளபெடை, ஒற்றள பெடை. யரலவின்: இங்கே,
யகரம் விட்டிசைத்தது. வெற்பாதி பத்து - மலை முதலிய பத்து; அவை
தசாங்கம்; சூ. 24. இந்நூலாசிரியர் நெடிலை நஞ்செழுத்தென்று கூறுதற்
கேற்பச் சிதம்பரப் பாட்டியலார் அமுதவெழுத் தல்லாதவெழுத்துக்களை
நஞ்செழுத்தென்பர்; (பொருத். சூ. 4.) (9)


அமுதெழுத்தும் அவற்றின் இயல்பும்
   
10. +அறிவோ ரமுதெழுத் தாமென் றறைவர் தசாங்கத்தயல்
குறின்முத னான்குங் கசத நபமவக் குற்றளவும்
உறுவன வாயி னுலகோர் புகழ்நன்மை எய்துமென்பர்
சிறுமுறு வற்செங் குமுதத் துவர்வாய்த் திருந்திழையே.

     (உரை I)
. எ - ன்; அமுதெழுத்தாமாறும் அவற்றின் இயல்பு ஆமாறும்
உணர்த்................று.

     (இ - ள்.) அ, இ, உ, எ என்று சொல்லப்பட்ட நாலும், க, ச, த, ந, ப,
ம, வ என்பனவும் ஆகப் பதினொன்றும் அமுதெழுத்தாம். அவை
பாட்டுடைத் தலைமகன் தசாங்கத்தயல் வரப் புணர்ப்பின் நன்மையவாம்
எ - று.

“மங்கலமே வியத்தொடு தோன்றினும்
அமுதெழுத் தேவரி னவையுமாங் குரிய;
மூப்பும் மரணமும் நீக்கலு மமுதொடு
பாட்டுண்டு முறையிற் பயனாகு மென்ப்.”

     பொய்கையார் முதல் ஒரு சாராசிரியர் அமுதெழுத்தென முதன்
மொழிக்கண் நிற்க வென்றோ துகையானும், இவ்வெழுத்துத் தாம்
முதலெழுத்தாய் வருதலும் இருவழியும் வருகவென்றானும் வருவதோர்
இழுக்கில்லை எ - று. (10)

மளனஎழுத்துக்களும் தேவதைகளும்
 
11. விதியவன் முந்நான் குயிர்தரச் செய்ய விரிசடைமேல்
நதியவன் நாரணன் சேயிந் திரன்ஞாலஞ் சூழவரும்
கதியவன் சோமன் தருமன் வருணன் கனகநிதிப்
பதியவ னென்றிவர் மூவா றுடம்பும் படைத்தனரே.

(உரை I) எ - ன், படைப்பு முறைமை உணர்த்..................று.