ஒருவர்மேற்
பாடும் பிரபந்தத்துக்கு இந்தப் பத்துவகைப் பொருத்தமும்
நன்றாக ஆராய்ந்து பார்த்து முதற்சீர் மங்கல மொழியில் வைத்துப் பாடுக.
(கு - ரை.)
இயமானன் - இந்திரகணம் ; இதனைத் துறக்கமென்றும்
இயமானனென்றும் கூறுவர் ; வெண்பாப். 1. 20,
உரை. கருவிளங்காய் -
அந்தரகணம். தேமாங்கனி - மாருதகணம். புளிமாங்கனி - அக்கினிகணம்.
கூவிளங்காய் - சூரியகணம்.
(பி - ம்.)
1 வாக 2 பரிதி 3 நீக்குவரே (23)
|
தசாங்கம்
|
|
|
24. |
+மலையாறு நாடூர் மலர்த்தார் வயப்பரி வார்மதத்த
கொலையார் களிறு கொடிமுர சாணை குலவுபத்தும்
தலையான நூலோர் தசாங்கம தென்ப தமதயலே
கொலையான சொற்பொரு டோன்றிடி லானந்தம் கூறுவரே. |
(உரை
I). எ - ன், தசாங்கம் இவையென்றும், அவற்றின் அயற்கண்
நிற்கத் தகாதன இவையென்றும் உணர்த்......று.
மலை............ஆணை இவை பத்தும் தசாங்கமாவன.
இவை ஒரு
குரிசிற்குரிய பொருள். தன்னைப் பரிசிலன் பரவுங்கால் அவற்றின் அயல்
கொலை முதலாகிய கொடுமைச் சொல்லும் பொருளும் அடுத்துக் கூறில்
ஆனந்தம் எ - று.
இவை இலக்கணம் இனமாகப் பாடும் அவையிற்றுக்கு இயல்பல்ல;
அல்லாதவையிற்றுக்கு ஆமென்று கொள்க. (24)
இனி யொரு பிரபந்தம் பாடுமிடத்துத் தசாங்க வருணனையும்
பாடவேண்டும். அது வருமாறு (உரை II).
25.
|
உன்னுந்
தசாங்க மொருசீ ரதனு ளுரைப்பதன்றிப்
பின்னின்ற சீரொடு சேர்ந்து பிளவு படிற்பிழையாம்
இன்னும் மவைதாம் புணர்மொழி யாயின் இயல்புபெறும்
மின்னும் வெளியுந் துடியு நிகரிடை மெல்லியலே. |
|
(உரை
I). எ - ன், தசாங்கங்கட்கு எய்தியதோர் நன்மை உணர்த்........று.
|