பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 21

இதுவுமது
   
27. +விரிசடைப் பிஞ்ஞகன் வேய்த்தோ ளெழுவர்முன்
                                காக்கவென்ன
அருள்பெறக் கூறி னவரவர் செய்யும் கொலையகற்றி
உரியநற் கங்கை யுமையாள் மதியூர் விடைகடுக்கை
விரைமலர் தார்மற்று மங்கல மாக விளம்பினரே.

     (உரை I). எ - ன், இதுவும் காப்பு முதலே இருக்கும் கடவுளர்
ஆமாறுணர்த்...........று.

     (இ - ள்.) செஞ்சடைப் பிஞ்ஞகனையும் எழுவர் மாதர்களையும்
காப்புக்கு முதலாக்காது, கொலையும் கூறாது, கங்கையையும் உமாதேவியையும்
மதியையும் (விடையையும்) கொன்றையையும் குலவ எடுத்து மங்கலமாகக்
கூறுதல் வேண்டும் எ - று.

     (கு - ரை) எழுவர் - சத்தமாதர் ; அபிராமி, நாராயணி, இந்திராணி,
கௌமாரி. வாராகி, துர்க்கை, காளி என்பார். காப்புக்கு முதலெடுக்குங் கடவுள்
திருமால் என்று முன்பு குறித்தலால், இங்கே ‘செஞ்சடைப் ............ காப்புக்கு
முதலாக்காது’ என்றார்.(2)

 
இதுவுமது
   
28. பதினொரு மூவரும் பங்கயத் தோனும் பகவதியும்
நிதிமுத லோனும் 1பருதியுஞ் சாத்தனும் 2நீளமரர்க்
கதிபதி தானு மறுமுகத் தைங்கரத் தற்புதனும்
மதிபுனை வேணி வடுகனுங் காவல்செய் வானவரே.

     (உரை I).
எ - ன், வகுத்த காப்புக்குரிய வானவரைத்
தொகுத்துணர்த்............று.

     (உரை II). எ - து; பிள்ளைத் தமிழென்னும் பிரபந்தத்துக்கு
முகவுரைக் காப்புக்கு வைக்கும் தேவர்களை உணர்த்...........று.

     பதினொரு மூவர் என்றது ஏகாதச ருத்திரரையும்,
பன்னிரண்டாதித்தரையும், அட்ட வசுக்களையும், மருத்துவர் இருவரையும்.
பங்கயத்தோனும் பகவதியும் என்பது திருமாலுந் திக்கமலத்து உதிக்கப்பட்ட
பிரமனையும், பாலைநிலத்துக்குத் தலைவியாகிய பகவதியையும். எண்ணிதிக்கு
முதல்வனாகிய