குபேரனையும் ஆதித்த
பதவிபெற்ற மூர்த்திகளையும் அரியர புத்திரனாகிய
சாத்தனையும் தேவந்திரனையும் அறுமுகக் கடவுளையும் விநாயக
மூர்த்தியையும் வைரவ தேவனையும் காப்புக்குத் தேவதைகளாக வைத்துப்
பாடுக.
(கு - ரை). பகவதியைப் பாலை நிலத்
தெய்வமென்பர்
களவியலுரைகாரர். தொகை கருதி ஆதித்தர்களைப்
பதினொரு மூவரில்
அடக்கியும், சிறப்புக் கருதி, பருதியும் என்று தனியாக விதந்தும் கூறினார்.
வைரவக் கடவுளுக்கும் சிவபெருமானைப் போல் பிறை முடித்த வேணி
உண்டென்பர்.
(பி - ம்.) 1
பரிதியுஞ் 2 நீள்வானவர்க் (3)
|
பிள்ளைக்
கவியின் பருவங்கள்
|
|
|
29.
|
முற்றந்த
காப்புச்செங் கீரைதால் சப்பாணி முத்தத்தோடு
மற்றந்த வாரானை யம்புலி வாய்ந்த சிறுபறையே
சிற்றில் சிதைத்தல் சிறுதே ருருட்டுதல் சேர்ந்தபத்தும்
சுற்றத் தளவும் 1கவிக்கெல்லை யாக்கொண்டு சொல்லூவரே.
|
(உரை
I). எ - ன், உரைத்த பிள்ளைப் பாட்டது மொழிய, நிரைத்த
நிலையென்பது உணர்த்..........று.
காப்பு முதல் இந்தப் பத்தும் பகரப்படும் எ - று.
பாட்டிற்கெல்லை
சுற்றத்தளவென்பதுவும் சொற்றதாம் எ - று.
(உரை II)
..............................பாடுமிடத்து முனிவர்க்கும் முடிபுனைந்த
மன்னர்க்கும் அமரர்க்கும் பாடலாம். குறுநில மன்னர்க்கும் லோபியர்க்கும்
பாடலாகாது. பாடில் இரத்தச் சேதம், தன்னுயிர்ச் சேதம் வரும். இஃது அறிக.
(கு - ரை.)
முன் தந்த, இங்கே கூறிய பருவங்கள் ஆண்பாற்
பிள்ளைத் தமிழுக்குரியன. இந்தப் பருவங்களி்ன் இலக்கணங்களைப்
பி்ள்ளைத் தமிழ் உரை நூல்களிற் காண்க. அம்புலிப் பருவம் சந்திரனை
முன்னிலைப் படுத்திக் கூறுவது. அம்புலிப் பருவத்தில் சாம, தான, பேத,
தண்டங்களை அமைத்துக் கூற வேண்டுமென்பது பலர் கருத்து. இதை
நோக்கியே காசினியிற் பிள்ளைக்கவிக்கம்புலி புலியாம் என்றார் ஒருவர்
(தனிப்.)
(பி - ம்.)
1 கவிக்கே முதற்கொண்டு (4)
|
|
|