பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 25

     (கு - ரை) மன்ன விருத்தம் - ஆசிரிய விருத்தம்.
வண்ணவிருத்தமாவது ; “எட்டுக் கலையா யிடையிட் டெதுகையாக், கட்டுக்
கலைக்கு முக்கண்ணியாத் - திட்டத்தில், தொங்கலு மெட்டாய்த் தொடை
மூன்று நான்காறாய்ப், பங்குபெறும் வண்ணப் பரப்பு” (இலக்கண சூடாமணி.)

     (பி ம்.) 1 ‘யன்ப தஃதின் னிலையென் றறைவர், ஈரைம்’ (6)


பிள்ளைக் கவிக்கு ஆவதோர் புறனடை
   
32. சிறுபறை யேமுதன் மூன்றுந் தெரியிலப் பேதையர்க்குப்
பெறுவன வல்ல விளையனே யாயினும் வேந்தன்பெறான்
மறுவின் முடிசூடிற் பிள்ளைக் கவிகாப்பு மாலைமுன்னே
அறிபவ ரொன்பதும் பன்னொன்று மாக அறைவர்களே.

     (உரை I.) எ - ன், சிறுபறை முதல் மூன்றும் உணர்த்...........று. (இதிற்
சொன்னவாறு உணர்ந்துகொள்ளுக.)

     (உரை II). எ - து; பெண்பாற் பிள்ளைக்கவி பாடுமிடத்துச்
சிறுபறைமுதல் மூன்றும் ஆகா. மற்றவை பாடலாம். இப்படிப் பிள்ளைத்தமிழ்
பாடுமிடத்துப் பத்துப் பருவத்திலும் பருவமொன்றுக்கு ஒன்பது பன்னொன்று
பாடலாம். எ - று.

     (கு - ரை) பெண்பாற் பிள்ளைத் தமிழில் சிறுபறை, சிற்றில் சிதைத்தல்
சிறுதேருருட்டுதலுக்குப் பதிலாகக் கழங்கு அம்மானை ஊசலைக் கொள்வர் ;
“.........அன்றிப் பெண்பாற்குக் கடை மூன்றொழித்துக் கழங்கம் மனையூசல்,
என்பவை கூட்டி யியம்புவர் புலவர்” (பிரபந்த தீபம், 94). கழங்குக்குப்
பதிலாக நீராடலைக் கூறுதலே பெருவழக்கு. ‘வேந்தன் இளையனே யாயினும்
முடிசூடில் பிள்ளைக்கவி பெறான்’ என்று கூட்டுக.

     காப்பு மாலை என்றே ஒரு பிரபந்தம் உண்டு. அதனை ஒன்பது
அல்லது பதினொரு செய்யுளில் அறைக என்றார். “காப்பு மாலையே
தெய்வங் காக்கவென, மூன்றைந்தேழ் செய்யுளின் மொழிபகற்றோரே”
(பிரபந்ததீபம், 35). (7)