பக்கம் எண் :
 

24நவநீதப் பாட்டியல்

செய்யுள் அருகியன்றி வாரா என்பதூஉம், ஆசிரிய விருத்தமும் பதினாறு
(கலை) வகுத்து இயற்றிய வண்ணமும் செய்யுளாம் என்பதூஉம், பாட்டு
ஐம்பதிற்றாழ்ந்து வாரா என்பதூஉம், உணர்த்...........று.


“ஈரெண் கலையினு மியன்ற வண்ணமும்
ஆசிரிய விருத்தமும் ஆதி யானவிச்
சுற்றத் தளவாய்த் தோன்றும் பாட்டுச்
சொற்றரப் பெறினைம் பானிற் சுருங்காது
சிற்றில் சிறுபறை சிறுதே ருருட்டல்
மற்றம் மூன்று மிகாது நிற்கும்
ஏனைய வரையறை யைம்பது திருந்தி
வருத லாகா தென்பது புலவர்
எடுத்துரை யாகும்”
 
-செய்யுள்வகைமை
 
“கொச்சகக் கவியும் கலிவெண் பாட்டும்
எச்ச மிலவே எவ்வாய் மருங்கினும்”

என்பது பருணர் பாட்டியல்.

“வண்ணம் என்ப கலைதொறும் ஒத்த
ஆசிரிய விருத்தத்தையும் அளவியற் றாண்டகத்தையும்
முதற்பாக் கவிதை வெண்பா வாகி
எக்குலத் தவர்க்கும் உரிய என்ப”

என்பது பொய்கையார் கலாவியல்.

     இக் கருத்தியல்பு அறிந்து கொள்க.

     (உரை II) எ - து; மேற்சொன்ன பத்துப் பருவத்துள்ளும் சிறுபறை
முதல் மூன்று பருவத்துப் பாட்டும் பிரபந்தச் சாயையில் சுருங்கி நிற்கவும்
பெறும்.

     வண்ண விருத்தமென்பது ; ஓரடிக்குப் பதினாறு கலை வகுத்து இப்படி
நாலடிக்கும் அறுபத்து நாலு கலை வகுத்து வண்ண விருத்தமாய்ப் பாடுவது.
இப்படி ஐம்பது விருத்தம் கலந்து பாடுவது பிள்ளைத் தமிழ் என்னும்
பிரபந்தமாம் எ - று.