பக்கம் எண் :
 

34நவநீதப் பாட்டியல்

“மன்னர் ஏவல் பெற்ற மாந்தர்க்குத்
தொண்ணூ றெழுபது சொல்லியல் வரையார்”

“ஆங்கவை இனமுறை ஒன்றுமூன் றைந்தெழு [முப்பது]
ஓங்கிய வெண்பாச் சின்னப் பூவே.”

     (உரை II). எ-து, மலை.............ஆணை யென்ற பத்தையும்
ஒவ்வொன்றுக்கும் பப்பத்து நேரிசை வெண்பாவாக நூறு நேரிசை வெண்பாப்
பாடுவது சின்னப்பூ வென்னும் பிரபந்தமாம். இது ஆரிய மரபில் முடிபுனைந்த
மன்னர்க்காம். இந்தத் தசாங்கம் பத்தையும் தனியே ஒரு பாவிலே ஓர்
உறுப்புவரப் பத்துப் பாப்பாடுவது தசாங்க வருணனையென்று பேராம் எ - று.

     (கு - ரை). வேந்தர்களுடைய சின்னங்களின் சிறப்பெல்லாம் தோன்றக்
கூறுவது சின்னப்பூ.

     (பி - ம்.) 1 ‘சேருமா றொவ்வொன்றிற் பத்துப்பத் தாயுறச்
செப்பிடு்ங்கால், ஆரிய மன்னர்க் கதுசின்னப் பூவென்பர் வேறொருபாச்’ (15)

ஆனைவிருத்தம் முதலியன, ஊர் வெண்பா
   
41. ஆனை குதிரை யெழில்வேல்வில் வாள்குடை கோலிவற்றின்
ஈனமி னாடு நகரத் திறமென்பர் 1மேவியல்பால்
ஆன திறத்தா சிரிய விருத்த2மீ ரைந்துவந்தால்

ஊனமில் வெள்ளைபத் தூர்வெண்பா வாக உரைப்பர்களே.

     (உரை I). எ - ன். ஆனை விருத்தமும் குதிரை விருத்தமும் வாள்
விருத்தமும் குடை விருத்தமும் செங்கோல் விருத்தமும் வில் விருத்தமும்
வேல் விருத்தமும்....ஆமாறுணர்த்.......று. பத்து நேரிசை வெண்பாவினால்
ஊரைப் புகழ்வது ஊர் வெண்பாவாம்.

“தானை பெற்ற தலைமை யோரையும்
ஏனைமுன் னோரைச் சொற்றன ராகத்
தானினி துரைப்பினும் தாழா தாகும்.”

     (உரை II). எ - து ஆனை விருத்தம்...................நாட்டு விருத்தம் நகர
விருத்தம் என்று சொல்லப்பட்ட பிரபந்தம் ஒன்றுக் கொன்று பப்பத்து
ஆசிரிய விருத்தம் பாடுவது இந்த வகையிற் பிரபந்தமாம்..........................எ - று.