பக்கம் எண் :
 

4நவநீதப் பாட்டியல்

 
எழுத்துப் பொருத்தம்
   
5. மூன்றைந்தே ழொன்ப தெழுத்தாம் வியனிலை யாய்முதற்சீர்
தோன்றிடி னன்றிரண் டீரிரண் டாறெட் டெழுத்துத்
                                       தொன்னூல்
சான்றவர் கொள்ளார் சமநிலை யாமென்று தாழ்குழையை
மான்றரு கோல மதர்விழி யோட்டிய வாணுதலே.

     (உரை I). எ - ன், முதற்சீர்க்குரிய எழுத்தவை உணர்த்........று.

     (இ - ள்.). எடுத்த முதற்சீர் வியனிலையாகிய மூன்றெழுத்தானும்
ஐந்தெழுத்தானும் ஏழெழுத்தானும் ஒன்பதெழுத்தானும் வரின் அவை ஆகும்.
சமநிலையாகிய இரண்டெழுத்தானும் நான்கெழுத்தானும் ஆறெழுத்தானும்
எட்டெழுத்தானும் வரின் குற்றமாம் எ - று.

     என்னை,

“மெய்யுடனாகி(ய) வியனிலை தானே
எய்துஞ் சமநிலை யிழுக்கென மொழிப”

என்பது மாமூலம்.

     (கு -ரை). வியனிலை - எழுத்துக்கள் ஒற்றைப்படையாக நிற்கும் நிலை
; வியம் - ஒற்றைப்படை எண்; ‘வியமெல்லாம் பாலை’ (அகநா.
செய்யுளடைவைக் குறிக்கும் பாட்டு). சூ. எட்டில் கூறும் வியனிலை சமநிலை
வேறு; இங்கே உள்ளன வேறு. எழுத்து, சமநிலையாமென்று கொள்ளாரென்று
கூட்டுக. முதற்சீர்க்கு எழுத்தெண்ணுங்கால் மெய்களையும் கூட்டிக்கொள்ளுக.
இரண்டெழுத்தான் வருவது ஒன்றின்றி வரும் தேமாச் சீர் என்க. முதற்
சீருக்கு இது கொள்ளத்தக்கதன்று. எடுத்த வச்சீர் என்று முற்சூத்திரத்தில்
வருவதை ஈண்டும் தந்து உரை எழுதினார், (5)

தானப் பொருத்தம்
   
6. குறிலைந்துந் 1தந்நெடில் கூட்டிஐ ஒளஎஒக்
                                கொண்டடைவே
முறைமையிற் பாலன் குமர னரசன்மூப் பேமரணம்
இறையவன் றன்பெயர் தான்பால னாமென எண்ணிவந்த
நெறிமையின் மூப்பும் மரணமும் பாடிடல் 2நீக்குவரே.

     (உரை I)
. எ - ன், தானம் ஐந்தும் ஆமாறு உணர்த்......று

     (பி - ம்.) 1 ‘நன்னெடில் கூடி’ 2 ‘நீக்கினரே’