(இ
- ள்.) இவை கொள்ளுமிடத்துப் பாட்டுடைத் தலைமகன்
இயற்பெயர் முதலெழுத்தைப் பாலனாகக் கொண்டு, முறையே எண்ணி மூப்பும்
மரணமுமாம் வருக்க எழுத்துக்கள் மங்கலச்சொல் முதலெழுத்தின்கண் வரின்
அவை அப்பெயர்க்கண் நன்மையாகாவென நீக்குவர் எ - று.
தன்பெயரெழுத்துப்
பால னாக
வந்த மூப்பும் மரணமும் வரைப,
- மாமூலம்.
நட்புதா சீனம் பகையென் றுள்ளம்
ஒப்புடைக் குறிக ளொருமூன் றாகும்.
பாலன் குமார னிராசத மென்னும்
மூவகைத் தானமும் நட்பென மொழிப.
விருத்த முதாசீன மரணம் பகையென
எடுத்துப் பகர வேண்டு மென்ப.
|
(உரை II). பாலன் ............ மரணம்
என ஐந்து வகைப்பட்ட தானம்
உண்டு. அவை கொள்ளுமிடத்து முதற்சீர் முதலெழுத்திற் கூடிவரும்
உயிரெழுத்து அகரமும் ஆகாரமும் பாலன்; இகரமும் ஈகாரமும் குமரன்;
உகரமும் ஊகாரமும் அரசன்; எகரமும் ஏகாரமும் ஐகாரமும் மூப்பு; ஒகரமும்
ஓகாரமும் ஒளகாரமும் மரணம். இது பார்க்கும் வகை: பாட்டுடைத் தலைவன்
பெயர் முதலெழுத்துயிரும் பிரபந்த முதற்சீர் முதலெழுத்துயிரும் ஓர்
உயிரெழுத்தாகில் அது பாலன்; தலைவன் பெயர் முதலெழுத்துக்கு
இரண்டாவது உயிராகில் குமரன்; மூன்றாவது உயிராகில் அரசன்; நாலாம்
உயிராகில் மூப்பு; ஐந்தாம் உயிராகில் மரணம்.
மூப்பும்
மரணமும் மொழிந்த காலை
நிலையிற் குலைதல் செல்வம் நீங்குதல்
கொலையிற் பிணியிற் கூட்டுத லாகும் |
என்பது இந்திரகாளியார்
என்னும் ஆசிரியராற் கூறப்பட்டது.
(கு-ரை.) இறையவன்-பாட்டுடைத்தலைவன்.
உதாரணம்:
குலோத்துங்கன் என்ற பெயருக்கு முதல் தானம் உ, ஊ; இரண்டாம் தானம்
எ, ஏ, ஐ; மூன்றாம் தானம், ஒ, ஓ, ஒள; நான்காம் தானம் அ, ஆ; ஐந்தாம்
தானம் இ, ஈ, ஆகும். இவற்றுள் முதல் மூன்று தானங்களின் எழுத்துக்கள்
நூலின் முதற்சீர் முதலெழுத்தாகக் கொள்ளத்தக்கவையாகும். (6)
|
|
|