பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 49

இதுவுமது
   
59. 1உண்டா முவகை தனையவ ரான்மகிழ்ந் தோலக்கத்திற்
கொண்டாடல் கூறிய பேயினைக் கூவிக் 2கொலைக்களந்தான்
கண்டார்ப் புறல்களம் வாழ்த்துதல் கைம்மலை வெண்மருப்புத்
தண்டா லுலந்தவர் தம்பற் றரளம் தடுக்குதலே.

     (உரை I).
எ - ன், உவகை வார்த்தை நாயகியுங் கேட்டு விரும்பினாள்
; ஓலக்கத்துக் கொண்டாடும் விருப்பம் தரும் சுவை, பாவம் விளக்கும்
இருமார்க்கங்கள் உரைத்தலும், கூறிய பேயினை ஆர்வத்தினாற் பின்னும்
கூவிச் சென்று களங்கண்டு களித்தலும், போர்க்களத்தை வாழ்த்தலும், பட்ட
யானைகளது வெண்மருப்புலக்கையால் மத்தகத்திற் பிறந்த முத்தும் செருவில்
உலந்தார் பற்களும் சேர்த்துக் குத்தலும் ஆம் எ - று.

     (உரை II). பாலை நிலத்துக்கு அதிபதியாகிய பத்திரகாளி கனவு
கண்ட பேயை மகிழ்ந்து தன் பக்கத்திலிருக்கிற யோகினியையும்
மோகினியையும் ‘கொலைக்களங்கள் உண்டான இடங்களைத் தேடி
அடையாளம் கண்டு வருவீர்கள்’ என்று ஏவப் பன்னீராயிரம் பேய்க்
கூட்டத்துடனே யோகினி ஒரு திசையும் மோகினி ஒரு திசையும் தேடிப்
போயினாராகக் கருதுவது எ - று.

     (பி - ம்.) 1 ‘உண்டா வேகை தனிலதைத் தான்மகிழ்ந்’ 2 ‘கொலைக்
களங்கள், கண்டாடல் போர்க்களம்’ (34)

 
இதுவுமது
   
60. முடியடுப் பிற்றோல் வயிற்றுக் குழிசியில் மொய்குருதி
நெடுவுலை யேற்றி நிணம்பெய்து கோப நெருப்பெரித்துத்
தொடியுடைத் தொட்டுடுப் பிற்றுழாய்ப் 1பேயூட்ட
                                 அம்மையுண்டங்
கடுதிறன் மன்னனை மன்னூழி வாழ அருளுதலே.

     (உரை I).
எ - ன், பட்ட மன்னர்கள் முடிகளே அடுப்பாக
ஆனையின் வயிறே குழிசியாகக் குருதியே உலை நீராக நிணமே
உண்ணமுதமாக (ப்பெய்து) கோபமே நெருப்பாகத் தொடித்