தோள்களே துடுப்பாகத்
துழாவி (யாக்கி)ப் பேயூட்ட, நாயகியும் உண்டு
செருவென்ற மன்னனை மன்னூழி வாழ்வதென்று நின்று கூறு (தலு) மாம்
எ - று.
(உரை II).
எ - து, சமர பூமியிற்பட்ட மன்னர் முடிகள் அடுப்புக்
கல்லாகவும் [இரத்தினங்கள் அக்கினியாகவும் வைத்து ஆனைக்கால்களே
உரலாகவும் ஆனைக்கொம்புகளே உலக்கையாகவும் பட்ட மன்னர் பற்களே
அரிசியாகயும் குத்தி] ஆனையின் வயிறுகளே மிடாவாகவும் குருதியே உலை
நீராகவும் விட்டுப் பூதமும் பேய்களும் கோபமே நெருப்பாகத்
தெரிந்தெரி்த்துப் பட்ட மன்னர் தோள்களே துடுப்பாகக் கொண்டு கிளறி
நிணங்களையும் போட்டுக் கூழாக்கி அந்தக் கூழைப் பேய்கள் வாரிக்
கையாலே பத்திரகாளிக்கு ஊட்டப் பத்திரையும் பசி தீர்ந்து அந்த யுத்தம்
பண்ணின மன்னவனை நீடூழி காலம் வாழ்க வென்று வாழ்த்தினதாகப்
பாடுவது பரணியென்னும் பிரபந்தமாம் எ - று.
(பி - ம்.)
1 யாக்கிப் பேயூட்ட வம்மை, வடிவுற வுண்டாங் கடுதிறன்
மன்னனை வாழ்த்துதலே (35)
|
இதுவுமது
|
|
|
61.
|
இன்னுமப்
பேய்க 1ளியற்றிய கூழ்பசி தீரவுண்டு
துன்னிநின் றாடுதல் சூழுங் கவந்தங்கள் 2தாமாடுதல்
மன்னும் புறப்பொரு ணூலோர் உரைவழு வாவகையே
முன்னு மொழிந்த படியே புணர்த்திக்கொள் மொய்குழலே. |
(உரை I). எ - ன், இதுவுமது.
ஆக்கின கூழைப் பேய்கள் பசிதீர வுண்டு கூத்தாடுதலும்
கவந்தமாடுதலுமன்றி மற்றும் புறப் பொருள் நூல்களிற் புகன்ற நெறியினையும்
அறிந்து இயற்றுக எ - று.
முடிபுனைந்த
மன்னர்க் கல்லது
குறுநில மன்னர்க்கு வரையா ராண்டே. |
(உரை II). எ - து பேய்கள் சமரபூமியிலே ஆக்கின கூழையுண்டு
களித்துக் கவந்தமும் பேயும் பூதமும் தங்களிலே ஒன்றுக்கொன்று
கைகோத்துக் கோவையாக நின்று
|