பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 51

குரவைக் கூத்தாடுதலைக் கூறுவது பறந்தலைச் சிறப்புப்பாட்டு எ - று.

     (பி - ம்.) 1 ‘ளியல்கூழ் பசிதீர வுண்டினிதாய்த்’ 2 ‘ஆடுதலிற்
பின்னுஞ் சிறப்புட னங்கடி வைத்தல், பிறவுரைத்தல் பன்னுங் களிப்பிவை
சொல்லுதலாகும் பறந்தலையே.’ (36)


பெருங் காப்பியம்
   
62. முன்னம் வணக்க மறமுத னான்கின் திறமுரைத்தல்
தன்னிக ரில்லாத் தலைவனைக் கூறல் தசாங்கங்களை
வன்னித்தல் வாய்ந்த பருவ மிருசுடர்த் தோற்றங்கடாம்
இன்னன கூறல் பெருங்காப் பியத்துக் கிலக்கணமே.

     (உரை I).
(இ - ள்). முன்னாற் கடவுள் வணக்கமும் அறம் பொருள்
இன்பம் வீடாகிய நான்கின் திறமும் உரைத்தலும், பொரு விறந்தோன் ஒரு
தலைமகனைப் புகலுதலும் அவனது மலையாறு நாடு ஊர் தார் பரி களிறு
கொடி முரசு ஆணை என்பனவற்றை வன்னித்துக் கூறலும், சந்திராதித்தரை
வன்னித்துக் கூறுதலும் முதலாயின பெருங்காப்பியத்துக் கியல்பு எ - று.

     (உரை II). இனி, பெருங்காப்பிய வகை வருமாறு :

     எ - து பெருங்காப்பியம் பாடுமிடத்து முன்னம் வாழ்த்தும் வணக்கமும்
மலை வருணனையும் கடல் வருணனையும் நாட்டு வருணனையும் நகர
வருணனையும் இரு சுடர்த் தோற்ற வருணனையும் அறம் பொருள் இன்பம்
வீடென்னும் நான்கு பொருட் பயனும் உடைத்தாய் அந்த நகருக்குத்
தன்னிகரில்லாத் தலைவனும் உடைத்தாகப் பாடுவது எ - று. (37)

இதுவுமது

   
63. பொன்முடி சூடல் பொழில்விளை யாடல் புனலாடுதல் நன்மணஞ் செய்தல் நறவூண் களிப்புக் கலவிதுனி
மன்னும் புதல்வர்ப் பெறுதனன் மந்திரத் தூதுசெல்லல்
1இன்னிகல் வென்றி வகைசந்தி கூறலிக் காப்பியமே.

     (உரை I). (இ - ள்). முடி சூடுதல், பொழில் விளையாடுதல்,
புனலாடுதல், நன்மணம் புணர்தல், மதுவுண்டு களித்தல்,