பக்கம் எண் :
 

74நவநீதப் பாட்டியல்

கவி பிள்ளைக்கவி என்னும் அவர் தன்மை நால்வகையும் நவிலப்படும்
எ - று


“ஆசு மதுரஞ் சித்திரம்வித் தாரமென
நால்வகைப் படூஉம் நன்னெறிக் கவியே.”
ஆசு கவியே அறிவெனத் தொடுத்த
எழுத்தினும் பொருளினும் உள்ளுறை யாக
இழுக்கா வண்ணம் யாப்புடைத் தாகும்.”
இன்பக் (கவியே) யெல்லைக் குரிய
இன்பம் பயக்கும் யாப்பிற் பொருளின.”
சித்திர கவியே மாலை மாற்றொடு
சக்கர முதலிய வரூஉ மென்ப”
அகலக் கவியே மங்கல மாலை
கலிவெண் பாட்டொடு களிறே குதிரை
மற்றவை பொருளாற் பிறவுங் காட்டுக
மருங்கின்
நல்லோ ராய்ந்த ஒளியும் பொருளும்
ஒன்பது சுவையும் நால்வகை விருத்தியும்
கூட நோக்கிக் குறித்தொரு வன்மேற்
பாடுஞ் செய்யுட் பாடு வோனே.”
“சொல்லப் பட்ட எல்லாக் கவியும்
இரண்டு மூன்று நான்கு மூனம்
இல்லா மருங்கிடை ஒருவன் பெறுமே.”

இவற்றால் ஆசு முதலாயின நான்கும் உடன் கண்டு கொள்க.

கள்ளக் கவியே சார்த்துக் கவியே
வெள்ளைக் கவியே பிள்ளைக் கவியென
நாற்பாற் படுத்தனர் யாப்பியிற் புலவர்.”
“அவற்றுள்,
கள்ளக் கவியே கவிஞன் றனைமகற்குக்
கள்ளத் தொடுபெயர் களைந்தே யாக்கி
ஒருவர்க் கியம்யும் மாணிலோனே.”
சார்த்துக் கவியே முன்னோன் பாடிய
யாப்பின் படிசிறிது தொடுப்போ னென்ப.”
வெள்ளைக் கவியே புனமொழிந் தொழுக்கும்
பிள்ளைக் கவியே பின்னிலை நிற்கும்.”
 
-பருணர் பாட்டியல்.