(இவை)
இளைய மகளிர்க்கே கொள்க, என்னெனில், மேல் வரும்
சூத்திரத்தில் அரிவை முதலாயினர்க்கென்பர்; ஆதலின் ஈண்டு உரைத்தன
பேதை முதலாயினார்க்கு என்ப.
(கு - ரை).
பேதை முதலிய இளம் பருவமாதல் பற்றித்
தெள்ளாநறவம் என்றார்; தெள்ளா - தெளிவடையாத. உலா நூல்களில்
பேதைப் பருவ மகளிரை வருணிக்குமிடத்தில் மான்கன்று முதலிய
உவமைகளைப் புலவர் எடுத்தாளுதல் மரபு.
(பி - ம்.)
1 மானிற மான்கன்று 2 தேனிற வின்பமுந் தெள்ளா
நறவுஞ் செழுங்கற்பகக் (17)
86. |
முருக
னுவமைமுந் நான்கு 1முதலெண் ணிரண்டுவரை
அரசர்க் குரித்தவர் தம்மோ டுவமையல் லார்க்குரித்துத்
திருவோ டுவமை 2யரிவை முதலிய சேயிழையார்
பருவத் துரித்தென்ன வோதுவர் தொன்னூற் பருணிதரே. |
(உரை I). எ - ன், இதுவும் உவமிக்கும் உவமை
உணர்த்.........று.
(இ - ள்).
அரசரைப் பன்னிரண்டு முதற்பதினாறு (பிராயம்) வரை
முருகனோடு உவமித்தலாம். அல்லார்க்கு அரசன்தான் உவமையாம். அரிவை
முதலாயினோரைத் திருவோடு உவமித்தல் ஆம் எ - று.
(பி - ம்.)
1 முதலெட் டிரண்டரசர்க்குரிய குமர னவனோ டுவமைக்
குரித்தென்னலாம் 2 பெதும்பை முதற்பெண்கள் சேயிழையாய் (18)
|
கவி
வகை
|
|
|
87.
|
வாய்ந்த
கவிகம கன்வாதி வாக்கி வகைவனப்பும்
ஆய்ந்தவல் லாக மதுரமுஞ் சித்ரவித் 1தாரமுமே
ஏய்ந்த வகைநான்குங் கள்ளக் கவிமுதல் ஈரிரண்டும்
தேய்ந்த பிறைநுதற் சேயிழை யாயின்று தேர்ந்துகொள்ளே. |
(உரை
I), எ - ன், கவி முதலாகிய புலவர்கள் தன்மை யறிவுறத்
தொகைப்படுத்து அறிவித்தல் நுதலிற்று.
(இ - ள்.)
கவி கமகன் வாதி வாக்கி என்னும் அவரது தன்மையும்,
அவருடன் கவிகள் கூறுபாடாகிய ஆசு மதுரம் சித்திரம் வித்தாரமும்,
கள்ளக்கவி சார்த்துக்கவி வெள்ளைக்
|