பக்கம் எண் :
 

72நவநீதப் பாட்டியல்

“இறைச்சிப் பொருளை யூறுபடக் கிளப்பினும்
புகழ்ச்சிக் கிளவி்யிற் பொருந்தா கூறினும்
உவமைக் காட்சியி னூனந் தோன்றினும்
இவையல பிறவும் இன்னவை வரினே
அவைமொழி யப்பொரு ளானந் தம்மே.”

“முதற்றொடை மருங்கின் மொழிநிறுத் திருபெயர்
இடைப்படுத் தவ்வழி யிருசீர் படினே
வாய்ப்ப நோக்கி வல்லோர் கூறிய
யப்பா னந்தமென றறையல் வேண்டும்”

“தாழா மரபின் யாழொடு புணர்ந்த
பாவகை யொருவனைப் பாடுங் காலைத்
தொடைவகை மரபின் வந்தபெயர் தோற்றி
ஏங்கினு மிடுங்கினும் எழுத்துப்பிரிந் திசைப்பினும்
தூங்கினுங் குழறினுந் தூக்கா னந்தம்.”

“அளபெடை மருங்கிற் பாடப் படுவோன்
பெயரொடு தொடுப்பிற் பெற்றியின் வாராத்
தொடையா னந்தமெனத துணியல் வேண்டும்”

என்பது அகத்தியனா ரானந்த வோத்து


“திணைபால் மரபு வினாச்செப்புக் காலம்
இடனோடே ழாகு மிழுக்கு”

என்பதனுள் எழுவகைப்பட்ட வழுவும் அறிந்துகொள்க. (16)


 
உவமிக்கும் உவமைகள்
   
85. 1மானி னிளங் கன்று மஞ்ஞையின் பிள்ளை மதிக்குழவி
2தேனி, னமுதந்தெள் ளாநற வஞ்செழுங் கற்பகப்பூங்
கானிற நீர்வல்லி கல்லாத கிள்ளை கரும்பின் முளை
ஊனிற வேற்கண் மடவார்க் கியைந்த உறுப்புக்களே.

     (உரை I).
எ - று, அரிவையர்கட்குப் பருவத்திற்கு உவமை
யுணர்த்...........று.

     (இ - ள்), மானின் கன்று, மயிலின் பிள்ளை...........தேனின் அமுதம்,
தெள்ளாநறவம், கற்பகக்கன்று, நீர்வல்லி, கல்லாத கிள்ளை, கரும்பின் முளை
என இனையன மகளிர்க்கு ஓதும் முறைமை எ - று.