பக்கம் எண் :
 
197

வந்த எதுகைத்தாவது. புறப்பாட்டு வண்ணமாவது, முடிந்தது போன்று முடியாதது. அளபெடை வண்ணமாவது, அளபெடையில் வருவது. வல்லிசை வண்ணமாவது, வல்லெழுத்து மிகுவது. தூங்கல் வண்ணமாவது, வஞ்சி பயில வருவது. நெடுஞ்சீர் வண்ணமாவது, நெட்டெழுத்துப் பயில வருவது. குறுஞ்சீர் வண்ணமாவது, குற்றெழுத்துப் பயில வருவது எனக்கொள்க. வண்ணம் *நூறென்பாருமுளர். அவை வந்தவழிக் கண்டுகொள்க.

(36)

யாப்பதிகாரம் முற்றும்.

யாப்புப்படலம் முற்றும்


* 'வண்ணம் தொகையான் ஐந்தும், வகையான் இருபதும், விரியானூறும் என்ப. தொல்காப்பியர் முதலானோர் இருபதென வகுத்தனர். கையனார், அவிநயனார் முதலானோர் நூறென விரித்தனர். நூறாமாறு:

"தூங்கேந் தடுக்கல் பிரிதன் மயங்கிசை சொற்றவற்றைப்
பாங்கே யகவ லொழுகல் வலிமெலி பாற்படுத்தி
யோங்கேர் குறினெடில் வல்லின மெல்லின மோடிடையைத்
தாங்கா துறழ்தரத் தாம்வண்ண நூறுந் தலைப்படுமே."

என்பது பழைய குறிப்பு.