லாம் ?' எனின், தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியலின் முதற்சூத்திரமாகிய
'இடையெனப் படுவ பெயரொடும் வினையொடும்
நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே.'
என வருஞ்சூத்திரத்தாற் பெறுதலாகும், இறுதி நிலைகளும் இடைச்சொற்களாதலின். ஒருவனைக் கருதின சொல்லின் பின்பும், ஒருத்தியைக் கருதின சொல்லின் பின்பும், ஒன்றனைக் கருதின சொல்லின் பின்பும் சு என்னும் எழுவாய் வேற்றுமை உருபு வரும் என்றும்; அஃது அழிந்து சாத்தன், சாத்தி, குதிரை என்பன சாத்தன், சாத்தி, குதிரை என்றே நிற்கும் என்றும்; பலவற்றினைக் கருதின சொல்லின் பின்பு சுவ்வும் கள்ளுமாம் இரண்டு எழுவாய் வேற்றுமை உருபுகளில் ஒன்று வரும் என்றும்; பலவற்றில் கள் என்னும் உருபுவரின், மரம் என்பது மரங்கள் என்றாய்,'மரங்கள் நின்ற' என வரும் என்றும்; சு என்னும் உருபுவரின், அஃது அழிந்து மரம் என்பது மரம் என்றே நின்று,' மரம் நின்ற' என வரும் என்றும்: பலரைக் கருதின சொல்லின் பின்பும், ஒருவனைச் சிறப்பித்த சொல்,ஒருத்தியைச் சிறப்பித்த சொல், ஒன்றனைச் சிறப்பித்த சொல் என்னு மூன்று சிறப்புச் சொற்களின் பின்பும் அர், ஆர், அர்கள், ஆர்கள், கள், மார் என்னும் முதல் வேற்றுமை உருபுகள் ஆறும் வரும் என்றுங் கொள்க.
'இனி, ஒருவனைக் கருதின சொல், ஒருத்தியைக் கருதின சொல், ஒன்றனைக் கருதின சொல், பலவற்றைக் கருதின சொல், பலரைக் கருதின சொல் என்னும் ஐம்பால்களைக் கருதின சொற்களோடு கூட்டிக் கூறப்பட்ட ஒருவனைச் சிறப்பித்த சொல், ஒருத்தியைச் சிறப்பித்த சொல், ஒன்றனைச் சிறப்பித்த சொல் என்பன யாவை?' எனின், சாத்தன், கொற்றன் என்பன முதலிய ஒருவனைக் கருதின சொற்களும், சாத்தி, கொற்றி என்பன முதலிய ஒருத்தியைக் கருதின சொற்களும்; நரி, நாரை முதலிய ஒன்றனைக் கருதின சொற்களுமாகிய இம்மூவகைச் சொற்களோடும் பலரைக் கருதின சொற்களுக்குரிய அர் முதலிய முதல் வேற்றுமை உருபுகள் கூடி, சாத்தனார், கொற்றனார் எனவும்: சாத்தியார், கொற்றியார் எனவும்; நரியனார், நாரையார் எனவும் வருவனவாகும் என்று கொள்க.