பக்கம் எண் :
 
291

இப்படலத்தின் ஐந்தாம் பாட்டின் உரையில், 'ஒருவனைச் சிறப்பித்த சொல்லின் பின்பும், ஒருத்தியைச் சிறப்பித்த சொல்லின் பின்பும், ஒன்றைச் சிறப்பித்த சொல்லின் பின்பும் அர், ஆர், அர்கள், ஆர்கள், கள், மார் என்னும் ஆறு பிரத்தியமும் வரும்; (இவை எல்லாவிடத்தும் ஆவன அல்ல;) பலரைக் கருதின சொல்லின் பின்பு ஆறு பிரத்தியமுமாம்,' என்று உரையாசிரியர் கூறியவற்றை ஈண்டு நோக்குக.

மேற்குறித்த பாட்டில்,

'சிறப் புப்பல ரிற்கள் ளொழிந்தனவே'
என்று பாடங் காணப்படுகின்றது. வேறோர் ஏட்டில்,

'சிறப் புப்பலாசுவ மொழிந்தனவே'

என்னும் பிழையான பாடங் காணப்படுகின்றது. இப்பாடத்தையும், இப்படலத்தின் ஐந்தாம் பாட்டின் உரையில் உரையாசிரியர், 'ஒருவனைச் சிறப்பித்த சொல்லின் பின்பும், ஒருத்தியைச் சிறப்பித்த சொல்லின் பின்பும், ஒன்றைச் சிறப்பித்த சொல்லின் பின்பும் அர்,ஆர், அர்கள், ஆர்கள், கள், மார் என்னும் ஆறு பிரத்தியமும் வரும். பலரைக் கருதின சொல்லின் பின்பு ஆறு பிரத்தியமுமாம்,'என்று கூறியதையும் நோக்கின்,

'சிறப் புப்பல ரிற்சுவ் வொழிந்தனவே'

என்று அப்பாட்டின் அப்பாடம் இருத்தல் வேண்டும் என்பது விளங்குகின்றது. பழைய பதிப்புக்களில்,

'சிறப் புப்பல ரிற்கள் ளொழிந்தனவே'

என்னும் பாடமே காணப்படுகின்றது. இவற்றை ஆய்ந்து ஏற்புடையதைக் கொள்க.

இப்படலத்தின் ஐந்தாம் பாட்டின் உரையின் ஈற்றிலே 'விழுமியான், விழுமியாள், விழுமியோர் என்றாகலுமுண்டு,' என்றது, முதற்பாட்டிற் கூறப்பட்ட முதல் வேற்றுமை உருபுகளோடு ஆன், ஆள், ஓர் என்பன விதந்து கூறப்படாமையின்,' இவற்றையும் முதல்வேற்றுமை உருபுகள் என்று கொள்க என்றற்குக் கூறப்பட்டதாம் என்று கொள்க. இவற்றுள் ஓர் என்பது ஆர் என்பதன் திரிபாகும்.

பிரயோக விவேக நூலார் பிறர் மதமாகக் கூறிய 'பன்னும் பகாப்பதம்' என்று தொடங்கும் பாட்டின் உரையில், இவற்றையும் முதல் வேற்றுமை உருபுகளாகக் கூறியிருத்தலை