பக்கம் எண் :
 
இதன

    இதனால் இவ்வாறில்லாத பன்னிரண்டு மெய்களும் தம்மொடும்,
பிறவொடும் நிற்கும் தன்மையன என்பதாம்.

    சா: சுக்கு, நச்சு, பத்து, உப்பு, மகிழ்ச்சி, அயர்வு.

    வி: சொல் முதல் இறுதி எழுத்துகளேனும் சிறு கடிதாய் ஒழிய
இடையெழுத்து வரையறை சொற்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாதோ எனின் -
தமிழின் ஒலியிசைவு படக்கூறும் இவ்விதிகள் அயன் மொழி பெயர்ப்புக்குப்
பயன்படலும், இன்றும் தமிழ்பெரிதும் இவ்வரையறை கடந்தின்மையும்
பற்றிக்கூறினாம்.  இதனால் மொழிகட்டுறுங்கால் இவ்விதிகளை அகற்றிக்
கொளலாம்.

29. நூ: ங ஞ ண, நமன எனுமெய்ம்முன்னர்த்
       தத்தம் வல்லினம் ஒத்தன நிலையே

    பொ: ங ஞ ண, நமன என்னும் மெல்லின மெய்கள் முன்னே
அவ்வவற்றின் வல்லினம் ஒத்துவரும் நிலையின.

    சா: சங்கு, மஞ்சள், கண்டேன் நொந்தாள், வெம்பினன் மன்று.

30. நூ: யரழ முன்னர் சொல்முதல் மெய்வரும்

    பொ: யரழ என்னும் இம்மூன்று இடையின மெய்களின்முன் சொல்லுக்கு
முதலாம் உயிர்மெய் எழுத்துகள் வரும்.

    சா: வேய், வேர், கீழ் - நாற்றம், மரம், தடிப்பு, பண்பு, யாது, ஞாலம்,
வலிவு, சார்பு,கள்.

31. நூ: ணன முன் கசதப ஞமவய இவை வரும்.

பொருள் வெளிப்படை

    சா: விண், மன், கண், மின் - காட்சி, சீர்மை, பாங்கு, ஞாயிறு மழை,
வடிவு, யாக்கை; பொருந்தப்பொருத்துக.

32. நூ: லளடற முன்னர்க் கசப மயங்கும்.

பொருள் வெளிப்படை

    சா: மல்குதல், கொல்சாரை, இல்பொருள்; வெள்கினான், கொள்சட்டி,
உள்பொருள்; உட்கார்ந்தான், கட்சி, முட்புதர்; கற்க, கற்சுவர், கற்பு.

33. நூ: லளமுன் வயாவும் வம்முன் ‘யா’ வுமாம்

    சா: நல்வழி; உள்வழி; கொல்யானை; கள்யாறு; தெவ்யார்; அவ்யானை.